STREET CHILD CRICKET WORLD CUP: தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறார்களுக்கான WORLD CUP!!! சென்னையில் இருந்து நால்வர் தேர்வு!!!
  • 22:26PM Apr 12,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 22:26PM Apr 12,2019 Chennai

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு விளையாட்டு என்றால், எப்போதுமே அது கிரிக்கெட்தான். அதில் விதவிதமாக போட்டிகளை நடத்தி, ரசிகர்களுக்குத் தீனி போடுவது வழக்கம். இப்படி கடைசியாக 20 ஓவர் போட்டிகள் வரை IPL என்ற பெயரில் நடத்தும்வரை வந்தாயிற்று. அடுத்தது வேறென்ன, நேரடியாக கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்திற்கே சென்றுவிட்டனர். பெரிதாக ஒன்றுமில்லை, தெருவோர கிரிக்கெட்தான். தெருக்களில் சிறுவர்கள் தங்கள் வசதிக்கேற்றது போல விதிகளை மாற்றி அமைத்துக்கொண்டு விளையாடுவதுதான் தெருக் கிரிக்கெட்.

இதற்காகத் தற்போது லண்டனில் STREET CHILD CRICKET WORLD CUP என்ற பெயரில் இப்போது தெருவோர ஏழை கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை அழைத்து, அவர்களை மோதவிடுவதுதான் இந்தப் போட்டியே.

இந்தப் போட்டியின் இந்திய அம்பாஸடராக பொறுப்பேற்றிருப்பவர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலிதான். லண்டனில் நடத்தப்படும் இந்த STREET CHILD WORLD CUP போட்டிக்கு சென்னையில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் வடசென்னையில் உள்ள கருணாலயா பொதுச்சேவை மையத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் மும்பையைச் சேர்ந்த 4 சிறுவர்கள் சேர்ந்து, 8 பேர் கொண்ட ஒரே அணியாக லண்டன் செல்லவுள்ளனர்.

இந்த தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ், நேபால் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியா என இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இந்த நான்கு சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை அல்லது இரண்டு பேரையும் இழந்து ஆதரவற்ற நிலையில், ஏழ்மையுடன் கருணாலயா மையத்தில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சபாஷ்!!!

Top