Shoreline

சாப்பாட்டு ராமனாக இருக்கும் புள்ளிங்கோவுக்கு வச்சிட்டாங்கய்யா ஆப்பு! இனிமே இஷ்டத்துக்கு வெளுத்துக்கட்ட முடியாது கண்ணுங்களா!

Sep 25 2021 03:55:00 PM

புள்ளிங்கோ மட்டும்தான் சாப்பாட்டை இஷ்டத்துக்கு சாப்பிடுறாங்க என்று சொல்லிவிட முடியாது. பெரியவர்களில் சிலரும் கூட உணவு ருசியா இருந்ததென்றால் புல் கட்டு கட்டிருவாங்க. சாப்பிடும் போது நல்லாத்தான் இருக்கும். ஆனா அளவுக்கு மீறி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும் அபாயம் உள்ளது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

lock-jaw torture-device

கண்டபடி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதற்கு நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர். அந்த நாட்டில் உயர்கல்வி படித்து வரும் என்னுடைய தோழி ஒருவர் இந்தக்கருவியின் செயல்பாடு குறித்து எனக்கு விளக்கமாக சொன்னாங்க. டார்ச்சர் டிவைஸ் என்று அழைக்கப்படும் இந்த சிறிய கருவியை பற்களுக்கு இடையில் பொருத்துகின்றனர்.

lock-jaw torture-device

இந்தக்கருவியை பொருத்திவிட்டால் உங்களுடைய வாயை வெறும் 6 மில்லிமீட்டர் அளவு தான் திறக்க முடியும். இந்த கேப்பில் நீங்க பால், ஜூஸ் போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். திட உணவுகளை சாப்பிட முடியாது. இதன் காரணமாக உடல் எடை அதிகம் உள்ள நபர் ஒரு சில வாரம் அல்லது மாதங்களில் கணிசமான அளவுக்கு எடையை குறைத்துவிட முடியும்.

lock-jaw torture-device

சோதனை அடிப்படையில் இந்தக்கருவியை பயன்படுத்திய சிலருக்கு உடல் எடை குறைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இந்தக்கருவியை பயன்படுத்தி ஒருவர் 15 நாட்களில் மூன்றரை கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.

lock-jaw torture-device

இதனால் இந்தக்கருவி விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக்கருவியை வாயில் வைப்பதால் வாயை திறக்க முடியாது. அதனால் திட உணவுகளை சாப்பிட முடியாது என்பது உண்மைதான். ஆனால் பேசுவது மற்றும் சுவாசிப்பது ஆகிய விஷயங்களில் எந்த சிரமமும் இருக்காது என்று இதனை கண்டுபிடித்துள்ள அறிஞர்கள் கூறுகின்றனர்.