#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம்!!! அமிர்தமே விஷமான கொடூரம்!!!
  • 20:56PM Jul 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:56PM Jul 09,2019 Chennai

BIHAR மாநிலத்தில் கிட்டத்தட்ட 100 குழந்தைகளுக்கு மேல் மரணம், 400 குழந்தைகள் HOSPITAL-களில் ADMIT செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக LOW BLOOD SUGAR (HYPOGLYCAEMIA) என்று சொன்னாலும், இத்தனை குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு சரி, ஆனால் உயிரிழக்கும் அளவுக்கு LOW BLOOD SUGAR எப்படி ஏற்பட்டது??? இதன் பின்னணியில் அமிர்தமாக இனிக்கும் ஒரு பழம் இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியே. அது LITCHI!!! இந்த மரணங்கள் எப்படி நேர்ந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

#1. உயிரிழந்த அனைத்துக் குழந்தைகளுமே தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள். இவர்களுக்கு தோட்டத்தில் உதிரும் பழங்களை எடுத்துத் தின்னும் பழக்கம் இருந்திருக்கிறது.

#2. மற்ற நோய்களைப் போல இல்லாமல் இது தாக்குவது வெளியே தெரியாது. காலையில் வாந்தி, காய்ச்சலில் ஆரம்பிக்கும் இது சிறிது நேரத்தின் மயக்கமாகி விடும்.

#3. உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், சிறிது நேரத்திலேயே மரணம் நேரும்.

#4. இதற்குக் காரணம் இயல்பாகவே LITCHI பழத்தில் இருக்கும் ஒரு TOXIN-தான். அதன் பெயர் METHYLENE CYCLOPROPYL GLYCINE (MCPG).

#5. வழக்கமாக இரவு சாப்பிடாமல் தூங்கப் போனால், காலையில் GLUCOSE LEVEL LOW-வாகத்தான் இருக்கும். இதைச் சமாளிக்க உடலில் கூடுதலாக இருக்கும் GLYCOGEN-ஐ உடல் GLUCOSE ஆக மாற்றிக் கொடுக்கும்.

#6. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு GLYCOGEN பற்றாக்குறை ஏற்பட்டு, HYPOGLYCAEMIA-வாக முற்றி இருக்கும். அதனால், இது வேலைக்கு ஆகாது.

#7. வேறு வழியின்றி, FATTY ACID-களை மாற்றலாம் என்றால், MCPG அதை அனுமதிக்காது.

#8. FATTY ACID-களை GLUCOSE ஆக மாற்ற முடியாததால் நிலைமை சிறிது நேரத்திலேயே SERIOUS ஆக மாறிவிடுகிறது.

#9. இந்த PROCESS தடைப்பட்டதுமே உடல் AMINO ACID-களை வெளியேற்றத் துவங்குகிறது. இது மூளைக்கு மிகவும் ஆபத்தானது.

#10. ஒருபக்கம் தேவையான சக்தி கிடைக்காத நிலையில், AMINO ACID-களின் தாக்குதலால் மூளை வீங்க ஆரம்பிக்கிறது. அது மயக்கம், கோமா, ஏன் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

#11. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளை மட்டும்தான் இது பாதிக்கும் என்றும், அதிக ஊட்டச்சத்து உள்ள குழந்தைகளை இது எதுவும் செய்வதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

#12. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Free Food Forest  |  Musk Melon Benefits  |  Apricot - Bodhi Fruit  |  Curd Food Poisoning  |  Kiwi Fruit Benefits  |

#LITCHITOXIN என்பது உண்மையில் TOXIN அல்ல. அது ஒரு CONDITION. கொழுப்பைக் கரைக்க விடாத அதன் தன்மையே, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு விஷமாக மாறிப் போனதை என்னவென்று சொல்வது. சுதந்திரமடைந்து இத்தனை வருடங்களாகிவிட்டது. குறைந்தபட்சம் குழந்தைகளுக்காவது போதுமான சத்துள்ள உணவுகள் மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். யார் செய்வது???  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top