#Liquor பொருளாதார மந்தநிலை நாட்டிற்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான்! புலம்பும் ஒயின் ஷாப் ஓனர்கள்!
  • 19:14PM May 08,2020 India
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:14PM May 08,2020 India

இந்தியாவின் ஜிடிபி நிலை தற்போது 4.5 புள்ளியாகக் குறைந்துள்ளது, வெங்காயத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது, குடும்பங்களுக்கான மாதாந்திர பட்ஜெட்டில் செலவுகளின் அளவு அதிகரித்துள்ளது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் வேலைவாய்ப்பின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார மந்தநிலையால் குடும்பத்தினர் பலர் தங்களின் செலவுகளைக் குறைத்து வருகின்றனர். குடும்பத்தினரின் இந்தச் சிக்கனத்தால் தற்போது அதிகம் அடிவாங்கி இருப்பது ஒயின் ஷாப் தான்!

Image result for wine shop india

பொருளாதார மந்தநிலையால் நடப்பு நிதியாண்டில் மதுபான விற்பனையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக அத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மனவலி காரணமாக மதுபான கடைக்கு வரும் ஆண்கள் தற்போது ஒரு நாளிற்காக இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்று யோசித்துத் திரும்பி சென்றுவிடுகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு விற்பனையில் 10.3 சதவீத வளர்ச்சி இருந்ததாகத் தெரிவித்த யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த வருடத்தின் 3-ம் காலாண்டில் 2.2 சதவீத வளர்ச்சி மட்டுமே பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

Image result for wine shop india

யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்குச் சந்தையில் போட்டி நிறுவனமாக உள்ள பெர்னர்டு ரிச்சர்டு நிறுவனத்துக்கும் இதே நிலை தான்! 2018-ம் ஆண்டில் இந்நிறுவனம் 34 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் தற்போது 3 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த விழுச்சி இதுவரை எப்போதும் ஏற்பட்டதில்லை என்றும் தற்போது அடித்தட்டு மக்களின் நிலையை இந்தப் பொருளாதார மந்தநிலை பாதித்துள்ளதால் தான் மதுபான விற்பனையும் விழுச்சி அடைந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top