#BarDancer மும்பை டான்ஸ் பார்களில் பணிபுரிந்த தமிழ் பெண்களின் தற்போதைய நிலை என்ன?
  • 21:58PM Oct 29,2019 Mumbai
  • Written By public
  • Written By public
  • 21:58PM Oct 29,2019 Mumbai

கடந்த 2005-ம் ஆண்டு மும்பை நகரத்தில் பிரபலமான டான்ஸ் பார்களுக்குத் தடை விதித்தனர். இந்தத் தடையானது பெருமளவில் நடன அழகிகளாகப் பணிபுரிந்த பெண்களின் வாழ்க்கையில் இடிபோல் விழுந்தது. 80-களில் இருந்தே இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இந்த டான்ஸ் பார்களில் நடன அழகிகளாக வந்து குவிந்தனர். இப்படி வந்தவர்கள் அனைவருமே குடும்பக் கஷ்டத்தால் பிழைப்பை தேடி ஓடிவந்தவர்கள். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் 2005-ம் ஆண்டு இந்த டான்ஸ் பார்களுக்குத் தடை விதித்தனர்.

Image result for bar dancer

அதன்பின் இங்குப் பணிபுரிந்த பலரும் வேறு வேலை தேடி அலைந்தும், விபசாரத்தில் விழுந்தும் தங்களின் வாழ்க்கையை ஓட்டினார்கள். இதில் வேறு வேலை தேடி சென்ற பெண்கள் பலருக்கு எங்குமே வேலை கிடைக்கவில்லை. ஏமாற்றி ஒரு வேலையில் சேர்ந்தாலும், உண்மை தெரிந்ததும் வேலையை விட்டு துரத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கை பாதாளத்தில் விழுந்தது போல ஆகிவிட்டது. இந்தக் காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் குடும்பச் சூழ்நிலைக்காக அங்கு நடன அழகிகளாகச் சேர்ந்தனர். இந்தத் தடை அமலுக்கு வந்த பிறகு மும்பையின் முக்கிய நகரங்களில் வேலைக்குச் சென்றனர். ஆனால் அவர்களின் முந்தைய வேலையைப் பற்றித் தெரிந்ததும், வேலை கொடுக்க மறுத்துள்ளனர்.

Related image

இதனால் வீட்டு வேலையாவது செய்யலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் அதிலும் சிக்கல் ஏற்பட்டு சில பெண்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தன. பெரும்பாலானவர்கள் இந்தப் பெண்களை வீட்டில் சேர்த்தால் குடும்பத்தைக் குறை சொல்வார்கள் என்று மறுத்துள்ளனர். வேலை கிடைக்காத காரணத்தால் சிலர் விபச்சாரம் தொழிலில் விருப்பமின்றிக் குடும்பக் கஷ்டத்திற்காகச் சேர்ந்துள்ளனர். இதில் வேலையின்றிப் பசியால் தூக்குபோட்டு தற்கொலை செய்தவர்களும் பலர் என்று கூறுகின்றனர். அங்கிருந்த தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எவருமே இந்தப் பெண்களுக்கு உதவ முன்வரவில்லை. தற்போது கிடைத்த வேலையைச் செய்து இந்தப் பெண்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top