நீரில் உள்ளது உயிர்!!!
  • 08:25AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 08:25AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

உலகில் முதலில் தோன்றியதும், அனைத்து விதமான உயிர்களின் ஆரம்பமாகவும் கருதப்படுவது நீர்தான்.  இன்று ப்ளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டு வருவது அதே நீர்தான். ஆனால் இரண்டும் ஒன்றுதானா??? ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றில்லை என்பதே உண்மை. காரணம், முதலில் சொன்ன தண்ணீருக்குள் உயிர் இருக்கின்றது.  இரண்டாவதில் இல்லை. புரியவில்லையா, அதற்கு நாம் கங்கை வரை போக வேண்டி இருக்கிறது. 

கங்கை, ஹிந்துக்களின் புண்ணிய நதியாகக் கருதப்படுவது.  இதில் குளிப்பதால் நம் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுவதாக நம்பப்படுகிறது.  பாவங்கள் போகின்றனவோ இல்லையோ, நோய்கள் போகும் என்பது 100 சதவீதம் உண்மை.  அவ்வளவு சுத்தமானது.  என்னது கங்கை சுத்தமானதா??? எங்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், உணவு மிச்சங்களும், ஊரின் கழிவுகள் மற்றும் பிணங்கள் – இவை எத்தனை இருந்தாலும் கங்கை சுத்தமாகத்தான் இருக்கின்றது.  சில ஆண்டுகளுக்கு முன், சர்வதேச அமைப்பொன்றில் கங்கையின் மாசு பற்றி நடத்திய ஆராய்ச்சியில் ஆச்சரியப்படத்தக்க ஒரு உண்மை வெளிப்பட்டது. முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நதிகளுக்கு இணையாகத்தான், கங்கை நீரின் மாசு அளவு உள்ளதென்பது தெரிய வந்தது.

காரணம், பணி உருகி வழிந்த நிலையில் வரும் நீர் என்பதால் இந்த நீரில் உள்ள நல்ல நுண்ணுயிர்களின் அளவு மிக அதிகம். இவை அனைத்தையும் நல்லதாக மாற்றி விடுகிறது. இவைதான் உங்கள் உடலுக்கு ஊட்டத்தையும், எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.  உடலில் உள்ள நல்ல அணுக்களின் செயல்பாட்டினை அதிகரிக்கச் செய்கிறது.  அப்படியென்றால் நாம் குடிக்கும் குடிநீர்??? Reverse Osmosis என்ற ஒற்றை வழியைத் தவிர சுத்திகரிக்கப்படும் அனைத்து விதமான குடிநீரும் தன்னுள் இருக்கும் அனைத்து பாக்டீரியாக்களையும் இழந்து விடுகிறது,  இவைகளில் கெட்ட பாக்டீரியாவுடன் சேர்த்து, நல்ல பாக்டீரியாக்களும் அடங்கும்.  எந்த நல்ல பாக்டீரியா???  கங்கை எனும் மாபெரும் நதியை இன்னமும் மாசற்ற நீராதாரமாக வைத்திருக்கும் அந்தப் பாக்டீரியா.

 

இப்பொழுது சொல்லுங்கள் எந்த நீரில் உயிர் உள்ளது??? நீர் என்பது வெறும் தாகத்திற்காக குடிப்பது அல்ல.  நம் உடலில் வியர்வை மற்றும் வேலையின் காரணமாக வெளியேறிய அனைத்துச் சத்துகளையும் திரும்பக் கொடுப்பதற்காக.  ஆனால். நாம் தாகத்திற்காக மட்டுமே குடிக்கும் பொருளாக மாற்றி வைத்துள்ளோம்.  மற்றவற்றுக்கு மருந்துகளையும், துணைக்காரணிகளையும் உட்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.  இனிமேலும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது. காரணம், நீரில் உள்ளது நம் உயிர்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top