Timeless

இவங்க வருவாய் மட்டும் எப்பவுமே மில்லியன் பில்லியன் என்று தான் இருக்குமோ? சாமானியனால் இந்த மாதிரி சம்பாதிக்க முடியுமா?

Sep 08 2021 11:03:00 AM

லிபெர் என்பது ஒரு பன்னாட்டு உபகரண உற்பத்தி நிறுவனமாகும். சுவிட்சர்லாந்தின் புல்லேவை மையமாகக் கொண்டு  இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சின்ன வயசுல என்னோடு பள்ளியில் படித்த வகுப்புத்தோழன் ஒருவன் இந்த நிறுவனத்துல வேலை பார்த்து வருகிறான். அவன் அவுங்க கம்பெனியை பத்தி ஓவரா புகழ்ந்து சொல்லுவான். ஆனா அவன் கூறியது எதுவும் பொய் இல்லை என்பதை நான் கொஞ்சம் தாமதமாத்தான் புரிஞ்சிக்கிட்டேன்.

liebherr-company

இந்த நிறுவமானது மொத்தம் 11 பிரிவுகளை கொண்டுள்ளது. எர்த் மூவிங், மைனிங், மொபைல் கிரேன்கள், டவர் கிரேன்கள், கான்கிரீட் தொழில்நுட்பம், கடல் கிரேன்கள், விண்வெளி மற்றும் போக்குவரத்து அமைப்புகள், இயந்திர கருவிகள் மற்றும் ஆட்டோமேஷன் அமைப்புகள், உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் கூறுகள் ஆகியவை அந்த பிரிவுகளாகும்.

liebherr-company

இந்த நிறுவனத்தின் வருமானத்தை கேட்டால் உங்களுக்கு நெஞ்சு வலி கூட வரலாம். கடந்த 2017ம் ஆண்டு இவர்களுடைய வருவாய் சுமார் 9 மில்லியன் யூரோக்கள். இதை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் நமக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிடும். இந்த வருவாயை உலகம் முழுவதும் உள்ள இவர்களுடைய 40000 பணியாளர்கள் ஈட்டிக்கொடுத்துள்ளனர்.

liebherr-company

இதைப்பார்த்தவுடன் உங்களுடைய மனசுல ஒரு விஷயம் ஓட ஆரம்பித்திருக்குமே? நம்மளும் இந்த மாதிரி நம்ம கம்பெனிக்கு சம்பாதித்து கொடுத்தால் நமக்கு போனஸ் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்ற எண்ணம் தானே உங்கள் மனதில் இப்போது இருக்கிறது. அப்படி நினைப்பதில் எந்த தவறும் இல்லையே. நீங்கள் நன்றாக உழைத்தால் உங்களால் நிறைய சம்பாதிக்க முடியும். ஒரே பிரச்சனை என்னவென்றால் நீங்க ஈட்டிக்கொடுக்கும் வருமானம் அல்லது லாபத்தை உங்களோடு நீங்க வேலை பார்க்கும் கம்பெனி பகிர்ந்துகொள்ள வாய்ப்புகள் குறைவு. ஒரு சில நிறுவனங்களை தவிர மீதி எல்லோரும் சம்பளத்தை தாண்டி சல்லிக்காசு கொடுப்பதில்லை.