Timeless

அதிபரா இருந்தாலும் உழைச்சு சம்பாதித்து தாங்க சாப்பிடணும்! சும்மா உக்காந்துகிட்டு இருந்தா அது நல்லாவா இருக்கும்?

Jun 09 2021 07:31:00 AM

உலகில் அதிபர் அல்லது பிரதமர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் சாதாரண வேலை செய்து படிப்படியாக முன்னேறி உயர்ந்த பதவிக்கு வந்து நாட்டை ஆட்சி செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் ஒருமுறை பதவிக்கு வந்துவிட்டால் அதன்பிறகு சாதாரண நிலைக்கு செல்ல முடியாது. ஒரு சில தலைவர்கள் வேண்டுமானால் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். நம் தமிழ் மண்ணை சேர்ந்த காமராஜர் சாகும் தருவாயில் தனக்கென எந்த செல்வமும் சேர்க்காமல் தான் இறந்து போனார். அப்படி பெரிய பதவியில் இருந்த போதிலும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மற்றொரு மனிதர் தான் லெக் வலேசா.

lech-walesa

லெக் வலேசா 1990 முதல் 1995ம் ஆண்டு வரை போலந்து நாட்டின் அதிபராக பதவி வகித்தவர். அவர் அதிபர் ஆவதற்கு முன்  எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்தார். அதிபர் பதவிக்காலம் முடிந்தவுடன் சொகுசு வாழ்க்கை வாழாமல் மீண்டும் தனது பழைய வேலைக்கே திரும்பி விட்டார்.

lech-walesa

அவர் பார்த்து வந்த எலக்ட்ரிசியன் வேலைக்கு அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு 1.40 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. நாட்டிற்கு அதிபராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தவர் இவ்வளவு சாதாரண சம்பளத்துக்கு வேலை செய்ய வந்துவிட்டார் என்று அந்நாட்டு மக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

lech-walesa

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று கேட்ட போது அவர் கூறிய பதில் திர்ச்சியடைய வைத்தது. போலந்து நாட்டில் முன்னாள் அதிபர்களுக்கு பென்ஷன் வழங்கும் முறை கிடையாது. எனவே நான் வேலை செய்து சம்பாதித்து என்னை கவனித்து கொள்கிறேன் என்று கூறினார். பல நாடுகளிலும் முன்னாள் அதிபர், பிரதமர் போன்ற உயர் பதவி வகித்தோருக்கு அரசாங்கம் சார்பில் நிறைய சலுகைகள் தரப்படும். போலந்து நாட்டில் இப்படி ஒரு வழக்கம் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது.