சட்டங்கள் யாருக்கானவை???
  • 13:20PM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:20PM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

சட்டங்கள் யாருக்கானவை???

இன்றைய காலகட்டத்தில் ஏறத்தாழ இந்தியாவில் உள்ள அனைவருக்குமே இந்தச் சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறதுகாரணம், கார்ப்பரேட்களை விட மோசமாகப் போடப்படும் சட்டங்கள்என்ன ஒன்று, கார்ப்பரேட்களில் குறைந்த பட்சம் ஒரு சட்டத்தின் மூலம் அதற்காவது வருவாய் கிடைக்கும்அதனால், தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களையும் அது உண்மையிலேயே மக்களுக்கானதா என்பதையும் பார்ப்போம்.

முதலில் ஹெல்மெட். விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க கொண்டு வரப்பட்ட முதல் நாளே ஹெல்மெட் அணிந்த ஒருவர் தலையில் லாரி ஏறி இறந்து போகிறார்உடனடியாக, ஒரு துணைச் சட்டம் - கட்டாயமாக I.S.I. முத்திரை பதித்த ஹெல்மெட்தான் போடவேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறதுஎல்லாம் சரி, உண்மையிலேயே ஹெல்மெட் அணிந்தால் விபத்து குறையும் என்ன??? கண்டிப்பாகக் குறையாதுஉயிரிழப்புகள் வேண்டுமானால் சிறிது குறைந்திருக்கலாமே ஒழிய, கண்டிப்பாக விபத்துகள் அல்லமக்களுக்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று சொல்பவர்கள், ஓவர் ஸ்பீடு மீது எந்த புது சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள்???

உண்மையிலேயே மக்களுக்கான சட்டமாக இருந்திருந்தால், அதிவேக வாகனங்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டிருக்கும்இந்தியா முழுமையிலுள்ள எந்த ரோட்டிலும் 100 தாண்டிச் செல்ல சட்டம் அனுமதிக்காத பொழுது, 150 CC-க்கு மேல் உள்ள பைக்குகளுக்கும், கார்களுக்கும் என்ன வேலை???  சரி, அதிகப்படியான சீதோஷ்ண நிலையில், ஹெல்மெட் போடுவதால் ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் என்ன என்று ஏதாவது ஆய்வு செய்யப்பட்டதா என்றால் இல்லைஅதிகப்படியான வெயில் மற்றும் கசகசப்பின் காரணமாக என் குணம் சற்றே மாறியபோது, என்னைத் தக்க வைத்துக் கொள்ள இருசக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டியாகி விட்டது

அப்புறம், புகைப் பிடிப்பதையும், குடிப்பதையும் நிறுத்தியே தீர வேண்டும் என்ற அளவிற்குப் போடப்படும் வரிகள்விற்பனையை நிறுத்த ஒரு சட்டம் போதும். ஆனாலும், வருடா வருடா பிரச்சாரம் செய்கிறேன் பேர்வழி என்று கோடிக்கணக்கான ரூபாயை வெட்டி செலவு செய்வது வாடிக்கையாகி விட்டதுநீங்கள் விலை ஏற்றியதால் உண்மையில் சிகரெட் மரணங்களை அதிகரித்திருக்கிறீர்கள் என்பதே உண்மைஎப்படி என்கிறீர்களா??? விலை ஏற்றப்பட்டாலும், வாங்கும் சக்தி பழைய இடத்திலேதோன் நின்று கொண்டிருக்கிறதுவிலைக்குத் தகுந்தது போல சிகரெட் தரம் கீழிறங்கிக் கீழிறங்கி, உண்மையிலேயே முன்பை விட அதிகம் பேர் பாதிப்படைந்திருக்கிறார்கள்குடி இன்னும் மோசம். மக்களுக்குச் சட்டத்தின் முகம் தெரிந்து நேரடியாக அவர்களே களத்தில் குதித்து விட்டார்கள்.

அடுத்து நாம் அனைவரும் போற்றிப் பாதுகாத்த ஜல்லிக்கட்டுவீட்டில் வளர்க்கும் விலங்கினத்தைக் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் வைக்க, எந்த அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டதென்பதே புரியாத புதிர்அதே போல் ஒரு அமைப்பை அனுமதிக்கும் போது, குறிப்பாகப் பன்னாட்டு அமைப்பு, அதன் காரண காரியங்களை கவனத்தில் கொள்வதற்கும் வலுவான சட்டங்கள் இல்லைஇவை எல்லாம் தவிர்த்துவிட்டு புத்தகங்களின் அடிப்படையில், தடை விதிக்கப்பட்டதுமதச்சார்பின்மை பறைசாற்றும் எந்த நாட்டுக்கும் தன் மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக சட்டமியற்ற முடியாது என்பது தெரிந்தும் இப்படி ஒரு சட்டம்.

போன மாதத்தில் கோர்ட்டு ஒன்று 15 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் கணவன் கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொண்டால் குற்றமில்லை என்று அறிவிக்கிறார்கள்எல்லாம் சரி, 18 வயது திருமண வயது என்று இருக்கிறதே, அதை மறந்தார்களா என்று கேட்டால் பதிலில்லை.

இப்படிப்பட்ட வேடிக்கையான சட்டங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறதுகடைசியாக நீட்.. ஓராண்டிற்குள் கல்வித்தரத்தை உயர்த்தவில்லையென்பது முக்கியமான வாதம். கல்வித் தரத்தின் அடிப்படை என்று கேட்டால் யாருக்கும் தெரியாது  அப்புறம் ஒரே வருடத்தில் எப்படி உயர்த்த??? நீங்கள் அடிப்படையாகக் காட்டும் C.B.S.E பள்ளிகளிலேயே +2 பொதுத் தேர்வுக்கு இரண்டு வருடம் ஆகிறதுஎந்த அடிப்படையில் ஒரு வருட விலக்கு அளிக்கப்பட்டது, அது திரும்பப் பெறப்பட்டதினை எதிர்த்து இத்தனை மக்கள் போராடினாலும் அவர்களுக்குக் கண்டிப்பாக இவர்கள் எந்த பதிலையும் சொல்லப் போவதில்லை.

இப்பொழுது ஒரிஜினல் லைசென்ஸ்ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போனால் புதிய லைசென்ஸ் எடுப்பதற்கான கால அவகாசம், செலவு செய்யப்படும் தொகை என எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொண்டு வரப்பட்ட சட்டம்உண்மையிலேயே இப்படி லைசென்ஸ் தொலைத்தவர்கள் வண்டி ஓட்டுவதைத் தவிர்ப்பதன் மூலமாக வேண்டுமானால் விபத்துகள் குறைய வாய்ப்பு இருக்கக்கூடும்ஆனாலும், இன்னுமொரு ஆபத்தும் இருக்கிறதுசட்டத்தை மதித்து லைசன்ஸ் வாங்கியவர், அது தொலைந்த நாளில் காவல்துறையிடமிருந்து தப்புவதாக எண்ணி விபத்துகளில் சிக்கி விடக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்எதையும் புரிந்து கொண்டுதான் சட்டம் இயற்றுகிறார்களா என்பதை நாம் சற்று யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

மக்களுக்கான அரசும், சட்டமும் தொலைந்து போய் வெகு நாட்களாகின்றதுஇன்று நடப்பதெல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சியே ஒழிய, மக்களுக்கான சட்டம் என்பதில் துளியளவும் நிஜமல்ல

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top