ELECTIONS 2019: முதல்ல குக்கருக்காக TOKEN!!! இப்போ குக்கரே TOKEN-ஆம்!!!
  • 17:28PM Mar 12,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:28PM Mar 12,2019 Chennai

R.K. நகர் இடைத்தேர்தலில் அமுமுக தலைவர் தினகரன் போட்டியிட்ட போது, வாக்களிப்பதற்காக, வாக்காளர்கள் அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்வதற்கு ஒரு நூதனமான வழிமுறையைக் கையாண்டார். அது 20 ரூபாய் TOKEN சிஸ்டெம். இதன்படி ஒரு குறிப்பிட்ட SERIAL வரிசை உள்ள 20 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து ஏரியாவுக்கும், வீட்டில் இருக்கும் தலைக் கணக்கிற்கும் ஏற்ப ஒரு ஓட்டுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 20,000 ரூபாய் வரை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தினகரன் தரப்பு இதை மறுத்துப் பேசினாலும், தேர்தல் முடிந்ததும் பணம் வாங்கச் சென்ற சிலருக்கு பணம் இல்லையென்று சொன்னதால், அவர்கள் போராட்டம் நடத்தி, அதன் வழியாக இவர் பணம் கொடுத்தது நிரூபணமானது. அவர்களுக்கு TOKEN-க்கு பணம் கொடுக்கவில்லையே ஒழிய, நடந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்று, MLA-வும் ஆகிவிட்டார். தெரிந்த கதைதானே, மறுபடி எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்டால், காரணம் இருக்கிறது.

அப்போது தினகரன் போட்டியிட்ட சின்னம் குக்கர். தற்போது குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, நீதிமன்றமும் சொல்லிவிட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வருவதையொட்டி, தஞ்சாவூர் பகுதிகளில் தேர்தல் அறிவிப்பு வந்த ஒரே நாளில் வீட்டுக்கு வீடு TOKEN-க்கு பதிலாக இந்த முறை குக்கரையே கொடுத்துச் சென்றிருக்கிறார்களாம் அமமுகவினர். இது மற்ற கட்சிக்காரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதுவும் எப்படி, குக்கர்தான் TOKEN, வோட்டுக்குப் பணம் தன்னால் வரும், முதல்ல இதைப் பிடிங்க என்று கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்களாம். ஆக மொத்தம், தினகரன் TOKEN சிஸ்டத்தை விடுவதாக இல்லை என்று தெரிய வருகிறது. தேர்தல் ஆணைய நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு முதல் நாளிலேயே இது போன்ற அக்கிரமம் நடப்பது பொதுமக்களையே சற்று முகம் சுழிக்க வைத்திருப்பது உண்மை. மக்களே திருந்த நினைத்தாலும், விடமாட்டார்கள் போல!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top