உடல் மொழி, உணவே மருந்து!!!
  • 06:29AM Sep 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:29AM Sep 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று கவலைப்படும் நம்மில் எத்தனைப் பேர் உண்மையாகவே நம்மைப் பற்றி, (நம் உடலைப் பற்றி!) சரியாகப் புரிந்து வைத்திருக்கிறோம்??? அனைத்து மருத்துவக் குறிப்புகளிலும். நமது செல்கள் ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றன.  இதன் காரணமாகவே எந்த ஒரு புது இடத்திலும், உணவு பழக்கத்திலும் நம் உடல் தன்னைத்தானே பதப்படுத்தி, பழக்கப்படுத்திக் கொள்கிறது.  இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் நமக்கு நாள்பட்ட வியாதிகள் வருகின்றன???

இதற்கெல்லாம் ஒரே காரணம் நாம் மருந்துகளை வெளியே தேட ஆரம்பித்ததுதான் என்பது நிஜம்.  நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு உபாதைக்கும், பருவ நிலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.  அதே போல் தனக்கு ஏற்படும் குறைகளை அறிந்து கொள்ளும் பக்குவம், எல்லா உடலுக்கும் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு தலைவலி அல்லது காய்ச்சல் நமக்கு வருவதற்கு முன்பாகவே நமது உடல் அதற்கான எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிவிடும். அதை நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது, உணவே மருந்தின் அடிப்படையே…

வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகமாக ஏற்படும் என்பதாலேயே நமக்கு அடிக்கடி தாகம் எடுக்கிறது. குளிர் காலத்தில் நுரையீரலில் உள்ள சவ்வு போன்ற பொருள் இறுகுவதால்தான் நமக்கு, காரமாக அல்லது வெப்பமாக எதையாவது சாப்பிடத் தோன்றுகிறது.  உவர்ப்பு. புளிப்பு போன்றவற்றைச் சாப்பிடத் தூண்டுவதும், இதைப் போன்ற செயல்பாடே. அமிலத்தன்மை குறையும் நேரத்தில், புளிப்பு சாப்பிடத் தோன்றும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை அஸ்திவாரமே, நம் உடல் எது தேவையென்று கேட்கிறதோ அது போலச் சாப்பிடுவது. நாளொன்றுக்கு இவ்வளவு தண்ணீர் பருகியே ஆக வேண்டும் என்பது கட்டாயமல்ல, ஆனால், தாகம் எடுக்கும் போது கண்டிப்பாகத் தண்ணீர் பருக வேண்டும் என்பது அவசியம்.  7 வருடங்களுக்கு முன் சர்க்கரை இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் - வெறும் உணவுப் பழக்கத்தினாலும், அக்குபஞ்சர் சிகிச்சையினாலும், இன்றளவும் ஆரோக்கியமாக, விரும்பும் நேரத்தில் விரும்பியதைத் தின்று வருவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.  உணவே மருந்து என்பதை உணர்ந்து, உடல்மொழியை நீங்கள் சரியாகப் படித்தால், நிச்சயமாக உங்கள் ஆரோக்கியம் பேணிப் பாதுகாக்கப்படும் என்பதை இனி மேலாவது உணர்வது நல்லது.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top