Rainforest

என்னங்க இவ்வளவு கொ டூரமான ஏரி கூட இந்த உலகத்தில் இருக்குதா? விசித்திரங்கள் நிறைந்த இதை பார்க்கவே ப யங்கரமா இருக்குதுப்பா!

May 13 2021 10:46:00 AM

எத்தனையோ அதிசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. ஆனால் அதை பற்றி சிந்திக்காமல் வானுலகத்தை பற்றி யோசித்துக்கொண்டும் வேறு உலகங்களை பற்றி கனவு கண்டுகொண்டும் இருக்கிறோம். இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வதற்கு நாம் நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டும்.

laguna-red-lake

பொலிவியாவில் அமைந்துள்ள லகுனா கொலராடோ ஒரு விசித்திரமான ஏரி.  மிகவும் அசாதாரணமான நிலப்பரப்புகளை தன்னிடத்தில் கொண்டுள்ளது. இது ஒரு உப்பு ஏரியாகும். இது பார்ப்பதற்கே பயமுறுத்தும் வகையில் நிறத்தை கொண்டுள்ளது. ஒரு பக்கத்தில் வெண்மை நிறமாகவும் மறுபுறம் இரத்தத்தை கொட்டி வைத்தது போல் சிவப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறது. செக்கச்சிவந்த இந்த நிறத்திற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சிவப்பு நிற பாறைப்படிவுகளும் சிவப்பு வண்ண ஆல்காக்களும் தான்.

laguna-red-lake

சிவப்பு நிறத்தில் தோன்றும் இந்த ஏரி ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்தையே கொண்டுள்ளது. சுமார் 6000 ஹெக்டேர் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.  பார்ப்பதற்கு சற்று பயமாக இருந்தாலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் தான் அமைந்துள்ளது இந்த ஏரி.

laguna-red-lake