Rainforest

சாகச பயணம் மேற்கொள்ளும் ஆசை இருக்கிறதா? அப்படியானால் இங்கு சென்று பாருங்களேன் இவ்வளவு உயரத்தில் இப்படி ஒன்றை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது

May 10 2021 06:52:00 PM

வாழ்க்கையில் ஒரு சிலர் எந்த ஆசைகளும் இன்றி இருக்கும் இடத்தையே சொர்க்கம் எனக்கருதி வாழ்ந்து கடைசியில் அங்கேயே இறந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பர். ஒரு சிலர் இந்த வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பர். ஒரு சிலர் ஆனந்தமாக நிறைய இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம். வெகு சிலர் மட்டுமே சாகசங்களை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருப்பர்.

laguna-69

நீங்கள் சாகச பயணம் செய்ய ஆசைப்படும் ஒருவர் என்றால் உங்களுக்கு பொருத்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் நீங்கள் சாகசமும் செய்யலாம். அழகாக சுற்றுலாவும் செல்லலாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்களே தேர்ந்தெடுத்து பயணம் செய்ய வேண்டியது தான்.

laguna-69

பெரு நாட்டில் அமைந்துள்ள ஒரு வித்தியாசமான ஏரி தான் லகுனா 69. இந்த ஏரியின் சிறப்பம்சம் என்னவென்றால் பசுநீல நிறத்தில் பளிங்கு போல காட்சியளிக்கும். இந்த ஏரியின் பசுநீலத்திற்கு காரணம் இந்த தண்ணீரில் கலந்துள்ள தாது உப்புகள் தான். பளிங்கு போல மின்னும் இந்த ஏரியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,764 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு செல்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல.

laguna-69

மிக அற்புதமாக காட்சியளிக்கும் இந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்தால் மிகவும் கடினமான மலைகளையும் பாதைகளையும் கடந்து தான் சென்றாக வேண்டும். இங்கு இருக்கும் மக்கள் இது உலகிலேயே மிகவும் கடினமான மலையேற்றங்களில் ஒன்று என குறிப்பிடுகின்றனர். எனவே இந்த லகுனா 69 ஏரியை அடைவது என்பது ஒரு சாகச பயணமாகவே பார்க்கப்படுகிறது. இந்த கடினமான மலைகளை கடந்து சென்றுவிட்டால் சொர்க்கத்தில் நுழைவது போன்ற உணர்வை இந்த ஏரி மற்றும் அதன் சூழல் உங்களுக்கு தரும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.