Shoreline

பெண்கள் எந்த வகை ஆண்களை தங்களுடைய வாழ்க்கையில் அனுமதிக்கமாட்டார்கள் என்று தெரியுமா? இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே !

Apr 20 2021 09:47:00 AM

பெண்களின் அன்பை பெறுவது இந்த உலகில் மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நம் அம்மா, சகோதரி இவர்களை விடுங்கள். நம் மனதிற்கு பிடித்த பெண், நம்முடைய காதலி அல்லது மனைவி இவர்களுடைய அன்பை பெறுவதற்கு நீங்கள் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். ஒரு பெண்ணின் கவனத்தை ஈர்த்து அவர்களுடைய மனதில் இடம் பிடிப்பது சாதாரண காரியமல்ல.

ladies-gents healthy-relationship

நீங்கள் நல்லது என்று நினைத்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் பெண்களை உங்களிடமிருந்து விலகிப்போக செய்யும். நீங்கள் எதிர்மறை எண்ணத்தால் ஒருவரை பற்றி புகார் கூறுவது மற்றும் இன்னொருவர் வாழ்க்கையில் நுழைந்து தேவையில்லாத பிரச்சனைகள் செய்பவராக இருந்தால் உங்களிடம் எந்த பெண்ணும் நெருங்கி பழக வாய்ப்பே இல்லை. பெண்களை பொருள் போல நினைக்க கூடாது. அவர்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் ஆண்களையே பெண்கள் எப்போதும் விரும்புவார்கள்.

ladies-gents healthy-relationship

ஒரு பெண்ணிடம் நீங்கள் பழக ஆரம்பித்தால் அவர்களுடைய தோற்றம், உடலமைப்பு பற்றியே பேசிக்கொண்டிருந்தால் உங்களை பற்றி தவறான எண்ணம் அவர்கள் மனதில் பதிந்து விடும். மாறாக அவர்களுடைய திறமைகள், ஆசைகள், லட்சியம் , குணம் பற்றி பேசினால் அவர்கள் மனதில் உங்களை பற்றிய நல்ல அபிப்ராயம் உண்டாகும். நம்பிக்கையற்ற ஆண்களை பெண்கள் எப்போதும் நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். தங்களை சந்தேகப்படாமல் முழுமையாக நம்பும் ஆண்களைத்தான் விரும்புவர். இப்படிப்பட்ட குணங்கள் உங்களிடம் இருந்தால் உங்களை ஒரு பெண்ணும் தன்னுடைய வாழ்க்கையில் அனுமதிக்க விரும்ப மாட்டார்கள்.