#cyber bullying : மகளை ட்விட்டரில் கேலி செய்தவரிடம் சீறி பயந்த குஷ்பூ !!!
  • 00:37AM Oct 29,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:37AM Oct 29,2019 Tamil Nadu

தமிழ் சினிமாவில் 80 களின் முடிவிலும் 90 களிலும் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல நடிகை குஷ்பூ, இவருக்கு தான் தமிழ் நாட்டில் முதல் முதலில் கோவிலே கட்டினார்கள், மேலும் இவரின் பெயரை இட்லிக்கு வைத்து அழகு பார்த்தார்கள் , தற்பொழுது குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில்  இருக்கிறார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய மகளை Doll  ( பொம்மை ) என குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர் ஒருவர் தகாத வார்த்தைகளால்  குஷ்பூவின் மகளை கேலி செய்துள்ளார் . இதனால் கோபமான குஷ்பூ முதல்ல உன் மூஞ்சிய கண்ணாடில பாருடா. நாய் கூட பார்க்காது வாந்தி எடுத்துட்டு போய்டும். ப்ளட்டி என பதிலடி கொடுத்துள்ளார்.

தற்பொழுது பலபேர் fake id களில் தங்களுடைய முகம் தெரியாது என்ற தைரியத்தில் பலரையும் கண்டபடி பதிவிட்டு வருகிறார்கள், இதில் பல பிரபலங்கள் பாதிக்கப்ப் பட்டுள்ளனர் ,சமீபத்தில் கூட சவுத் கொரியாவை சேர்ந்த சுல்லி என்கிற பாப் பாடகி இப்படி சைபர் புள்ளியிங்  (cyber bullying)காரணமாக தற்கொலை செய்து கொண்டார் ,இப்படி உள்ள சூழ்நிலையில் குஷ்பூவின் பதிலடி உண்மையில் பாராட்டுக்குரியதே.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top