அதிர்ச்சி..! சபரிமலை விவகாரத்தால் சரிந்தது தமிழகம் - சோகத்தில் குமாரி மாவட்ட மக்கள்.!
  • 18:29PM Jan 04,2019 Kanyakumari
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 18:29PM Jan 04,2019 Kanyakumari

your image

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து வெடித்த போராட்டத்தின் விளைவாக குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 82 ஆயிரம் குறைந்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டையும் தெளிவாகப் பார்க்கலாம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கடலின் நடுவே இருவேறு பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியன சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்கும் வகையில், தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில், எம்.எல். குகன், எம்.எல். விவேகானந்தா, எம்.எல். பொதிகை ஆகிய மூன்று படகுகள், காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இடைவெளியின்றி இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் மட்டும் 20.49 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளனர். 2017 ல் 21.31 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டைவிட, 2018 இல் 82 ஆயிரம் பேர் குறைவாக வந்துள்ளனர். 2018 ஜனவரி மாதம் மட்டும் அதிகபட்சமாக, 2.80 லட்சம் பேரும், ஜூலை மாதம் 97 ஆயிரம் பயணிகளும் இங்கு வந்து பார்வையிட்டுள்ளதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தின் விளைவாக குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. சபரிமலையை மட்டுமல்ல திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள கோவில்களை வருவாய் கிடைக்காமல் தவித்து வருகின்றது. குமரியில் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பியிருக்கும் நூற்றுக்காணக்கானோரின் வாழ்க்கையையும் பாதி்த்திருக்கிறது சபரிமலை விவகாரம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top