தெரிந்தும் புரியாத காதல்!! - ரயில்வே காதல்!!
  • 11:41AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 11:41AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India

தெரிந்தும் புரியாத காதல்!! - ரயில்வே காதல்!!

வணக்கம் நண்பர்களே!! என்ன தலைப்பு இது என்று பார்க்கிறீர்களா!? இந்தத் தலைப்பை பஸ்ல போறவங்க,பைக்ல போறவங்களுக்கு புரியுதோ இல்லையோ ட்ரைன்ல போற எல்லாருக்கும் புரியும்!.ஒரு நாளைக்கு ட்ரைன்ல போறவங்க எண்ணிக்கை அதிகம்..

pjimage (7).jpg

காலைல கண்ண முழிச்சி,குளிச்சி அவசரத்துல கிளம்பி ட்ரெயின் புடிச்சி,போறப்ப எவளோ கஷ்டம்..., அதுலயும் அந்த ட்ரெயின் மிஸ் ஆய்டுச்சுனா(!),அடுத்த ட்ரெயின் எப்போன்னு பாத்து அதுக்கு,வெயிட்பண்ணி அந்த ட்ரெயின் ஏறி ஆபீஸ் போய்ட்டு,எல்லா வேலையும் முடிச்சு ரிட்டர்ன் கூட்டமா வர ட்ரைன்ல(!) தொங்கிட்டு,இடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்து சேரரதுக்குள்ள...உயிர் போய்ட்டு வந்துடுங்க..!!,இந்த மாதிரி போறவங்களுக்கு ஆயிரத்தெட்டு பொழுதுபோக்கு இருக்குங்க ..இவளோ கூட்டத்துலயும் சில காதல் ஜோடிங்க இருகாங்க அவங்கள பத்தினசின்ன கருதுதாங்க இந்தக் குறிப்பு

32-Train-Station-Romantic-Engagement-Session-by-Dallas-Photographers-Ivy-Weddings.jpg

இது என்னடா புதுசா ஒரு குறிப்பு..நாம பக்கத்த காதல் பத்தி?..,எத்தனை படத்துல பதிருக்கோம்!..என்ன இருக்கப்போதுனு நினைக்கிறீங்களா ..? இந்த ரயில்வே காதலென்றது,நாம பீச்சில,தியேட்டர்ல பார்கிராமரியான காதல் இல்லைங்க.! இந்த ஜோடிங்கள பார்க்கற பாதிபேர் என்னென்னமோ கிசுகிசுப்பாங்க..ஆனா அதெலாம் ஒரு பொருட்டக்கூட எடுத்துக்காம அவங்க ஒருத்தர ஒருத்தர் ரசிச்சி பேசிட்டு இருபாங்க..அது என் இப்படினு கேக்கறீங்களா..நாம நம்ம காதலுக்காகத் தனியா சில நேரத்தை செலவிடுவோம், பாதிபேர் காதலி/காதலனோடதான் பாதி நேரத்தை கழிப்பாங்க...ஆனா ரெண்டு முனைல இருக்கவங்க அவங்க வேலையயையும் பார்த்துகிட்டு அவங்க காதலையும் கவனிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தனங்க..

pjimage (9).jpg

இந்த மாதிரியான காதல் ஜோடிகளுக்கு கிடைக்கிற அந்த பத்தஞ்சி நிமிஷம் தங்கசொர்கமே..வீட்ல எல்லாப்பிரச்சனையும் யோசிச்சிட்டு திருப்பி ஆபீஸ் போயிட்டு,வேலைச்செஞ்சிட்டு அவங்க எல்லாரையும் சமாளிச்சிட்டு..எப்படா பொய் அவளை/அவனை பாப்போம்னு அந்த நிமிஷத்துக்கு காத்திருந்து டைம் ஆனதும் அவளுக்கு என்ன வாங்கிட்டு போலாம்னு கண்ல பட்டத்தை வாங்கிட்டு அவசர அவசரமா போய் காதலியை/காதலனை பார்க்கறப்ப இருக்கே ஒரு சந்தோஷம்!..அவங்க கண்ணை பார்க்கறப்ப எல்லா பிரச்சினை இருந்தும் அந்தக் கண்ணை பார்க்கும்போது ஒன்னுமே தெரியாதுங்க!... ரயில்வே ஸ்டேஷன்ல கொஞ்ச நேரம் ஒக்காந்து மனம்விட்டு பேசிட்டு அந்த கிடைச்ச நேரத்துல அவங்ககுள்ள இருக்கக் கதையை பேசிட்டு ட்ரைன் ஒண்ணா ஏறி ஒருத்தரோடு ஸ்டாப் வந்ததும் இறங்கி போரப்ப....திருப்பி இந்த நொடிகளுக்காக காத்திருக்கனும் நினைச்சிட்டு அவங்கள பத்தி யோசிச்சிட்டு,எப்படி நாளைக்கு நாள் இதே மாதிரி,அந்த இனிமையான நொடிகள் கிடைக்குமான்னு(?) யோசிச்சிட்டு இருக்க அவங்கள போயிட்டு நாம அவங்கள குறைசொல்லாம தொந்தரவு பண்ணாம இருக்கலாமே....!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top