#unknown Facts : தெரிந்த தொழில்நுட்பம் தெரியாத தகவல்கள் !!!
  • 12:33PM Jun 18,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:33PM Jun 18,2019 Tamil Nadu

தொழில்நுட்பம் என்பது நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கம் ஆகியுள்ளது. ஸ்மார்ட்போன், லேப்டாப், இன்டர்நெட் போன்ற அம்சங்கள் இல்லாமல், யாராலும் இந்த காலகட்டத்தில் வாழ  முடியாது என்பதே உண்மை.அந்த அளவிற்கு தொழில்நுட்பம் நமது வாழ்க்கையில் இரண்டற கலந்துள்ளது,இந்த பதிவில் நமக்கு தெரிந்த தொழில்நுட்பங்களும் அதன் பின்னால் உள்ள நமக்கு தெரியாத தவல்களை பற்றி பார்ப்போம்

tech2.png

நாம் இன்று அதிகமாக  பயன்படுத்திக்கொண்டிருக்கும் கூகுள் என்ற பெயர் தற்செயலாக உருவாக்கப்பட்டது.என்றால் நம்பமுடிகிறதா !ஆனால் உண்மை அதுதான் இது தற்செயலாக மட்டுமல்ல தவறுதலாகவும் உருவாக்கப்பட்டது  ஆம் கூகுள் என்பது கூகோல் என்பதற்குப் பதிலாகத் தவறுதலாக உருவாக்கப்பட்ட ஒரு பெயர். கூகோல் (Googol) என்பது பெரிய எண் 1க்கு பின்னால் 100 பூஜ்ஜியத்தைக் கொண்ட எண் என்பது பொருள், அத்தனை பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பிழையினால் உருவான பெயரைத்தான் நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம்.என்பதே ஆச்சரியமான உண்மை

tech4.jpeg

வேர்ல்டு வைடு வெப் (WWW) பற்றிய வேடிக்கை என்னவென்றால் நாம் பயன்படுத்தி வரும் வேர்ல்டு வைடு வெப்பைக் காட்டிலும் ஈமெயிலிற்கு வயது அதிகம் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள வேடிக்கையான ஒற்றுமை ஹெச்பி, கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற அனைத்து நிறுவனங்களும் ஐடி நிறுவனங்கள் என்ற ஒரு ஒற்றுமையைத் தாண்டி  ஒரு வேடிக்கையான ஒற்றுமையும் உள்ளது.அது  இந்த நிறுவனங்கள் அனைத்தும் கார் செட்டில் உருவாக்கப்பட்டவை என்பதே

tech.jpg

பில் கேட்ஸின் வீடு கட்டமைக்க எந்த கணிப்பொறியை பயன்படுத்தினார்கள் தெரியுமா,சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் மைக்ரோ சாப்ட்டின் போட்டியாளரான மேக் கணினியைப் பயன்படுத்தித் தான் அதேபோல ஒவ்வொரு மாதமும் சுமார் ஆறாயிரம் புதிய வைரஸ்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன என்பது சற்று வேடிக்கையான உண்மை தான். அப்போ இன்றைய தேதி வரை எத்தனை கோடி வைரஸ்கள் இணையத்தில் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top