Shoreline

கிவி பறவை பற்றிய சுவாரசியமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா? இந்த பறவை ஏன் மற்ற பறவைகளிடம் இருந்து வேறுபடுகிறது?

Apr 28 2021 06:23:00 PM

30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்து நாட்டில் முதன் முதலாக தோன்றியது கிவி பறவை. பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பறவைகளுக்கு இறக்கை கிடையாது என்பது இதனுடைய தனிச்சிறப்பாகும். இது 1 முதல் 4 கிலோகிராம் வரை எடை கொண்டதாகும்.

kiwi-bird

கிவி இரவு நேரத்தில் வித்தியாசமான ஒலியை எழுப்பும். மிகவும் பயந்த பறவையாக இது இருக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் இது மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும். இந்த பறவைக்கு வாலும் கிடையாது. இந்த பறவையின் கண்கள் மிகச்சிறியதாக இருப்பதால் கேட்கும் திறன் மற்றும் சுவாசிக்கும் திறன் மூலமே பெரும்பாலான செயல்களை செய்கிறது.

kiwi-bird

கிவியின் சராசரி உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த பறவை கிட்டத்தட்ட 50 முதல் 60 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டதாகும். கிவி நியூசிலாந்து நாட்டின் தேசிய பறவையாகும். பூச்சிகள், மண்புழுக்கள், தாவரங்கள் மற்றும் பழங்களை இந்த பறவை உணவாக எடுத்துக்கொள்கிறது. கிவி மற்ற பறவைகளை போல கூடுகளை கட்டுவதில்லை. மரத்தின் பொந்துகள் மற்றும் நிலத்துக்கடியில் உள்ள சிறிய துளைகள் இவற்றில் தான் இந்த பறவை வாழ்கின்றது.