நம்மை விடச் சாமர்த்தியமானவர்கள் குழந்தைகள்…
  • 12:31PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:31PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்றைய காலகட்டத்தில், போன தலைமுறை போலக் குழந்தைகளை நடத்துவதோ அல்லது நினைப்பதோ மிகவும் முட்டாள்தனமான ஒன்றாகும்.  உங்கள் குழந்தைகள் உங்களை விட சாமர்த்தியசாலிகள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்??? உங்கள் முகபாவங்களை வைத்தே உங்கள் எண்ணவோட்டத்தை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவை எதிர்வினையாற்றுவதாக என்றாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? ஆம் எனில், உங்கள் குழந்தையை நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று பொருள். எதனால் அவை அப்படி இருக்கின்றன.

அபிமன்யு தாயின் வயிற்றிலிருக்கும் போது சக்கரவியூகம் பற்றி அறிந்தான் என்று சொல்கிறது மகாபாரதம்.  உண்மையிலேயே வெறும் ஊண் பிண்டமாக இருந்து, காதுகள் உருவான சில நாட்களிலேயே குழந்தைகளுக்கு காதுகள் கேட்கத் துவங்கி விடும் என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபணமாகிய ஒன்று.  அதனாலேயே, மனைவி மீது அதிக பாசம் வைத்திருக்கும் ஆண்களின் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே தாயின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.  இதை அடுத்து தாய் பார்க்கும் சீரியல் முதற்கொண்டு அந்தக் குழந்தைகளுக்கு தாய் அறியாமல் ஏதொவொன்றைக் கற்பித்துக் கொண்டே இருக்கிறாள்.  தாயின் உடலில் ஏற்படும் இரசாயண மாற்றங்களை வயிற்றிலிருக்கும் குழந்தை நேரடியாக உணர முடிவதால் அவை பிறந்த பின்னும் அவற்றை உணர்ந்து எதிர்வினையாற்றப் பழகிக் கொள்கிறது.  இதன் காரணமாகவே குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது நல்ல கதைகள், நல்ல இதமான சங்கீதத்தை கேட்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

அடுத்து பிரபஞ்ச விதி.  இது அணு அளவிலிருந்தே செயல்படுகிறது.  நாம் எல்லோரும் ஏதோவொரு சமிக்ஞகளை பரப்பிக் கொண்டேதான் இருக்கிறோம்.  சிலரைப் பார்த்தவுடனே பிடித்துப் போவதற்கும், சிலரைப் பார்க்காமலே வெறுப்பதற்கும் இதுதான் காரணம். ஏனெனில், அணுக்கள் சிறந்த தகவல் கடத்திகள்.  யாருக்குத் தெரியும், குழந்தைகள் பிறக்கும்போது அவை ஜீன் வழித் தகவல்களைத் தாண்டி பிரபஞ்சத்தில் உள்ள தகவல்களையும் தன்னுள்ளே பதித்துக் கொண்டே பிறக்கிறது என்று??? அதனாலேயே அப்பா, அம்மாவுக்கு புரியாத கணிப்பொறியும், செல்லிடத் தொலைபேசியையும் கையாள அவர்களுக்கு அதிக நேரம் பிடிப்பதில்லை.  நல்ல எண்ணங்களை விதைத்தால் நல்லவை நமக்குத் திரும்ப வரும் என்பது நிச்சயமாக விளையாட்டல்ல. த சீக்ரட் என்ற புத்தகத்தில் தீவிரமான எண்ணங்கள் மூலம் பிரபஞ்சத்திற்கு நம் ஆசைகளைச் சொல்லுங்கள் என்று சொல்வதும் இதன் அடிப்படையிலேயே… அப்படி வெளியிடப்படும் ஆசைகள் விரைவிலேயே நிறைவேறுவதும் உண்மை.

உங்கள் குழந்தைகளை கவனியுங்கள்.  அவர்கள்தான் உண்மையில் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கின்றீர்கள் என்பதற்கான தடயம்.  அவர்களின் எண்ணவோட்டம் போகும் வேகத்திற்கு நிச்சயமாக நம்மால் ஈடு கொடுக்க முடியாது.  அதுவும் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் ஒரு தலைமுறை என்பது அதிகபட்சம் அறிவு நீதியாக 3-லிருந்து 5 வருடங்கள் மட்டுமே.  அதைத் தாண்டிய எவரானாலும் அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அவுட்டேட்டட் மென்பொருள்தான்.  இதைச் சாமர்த்தியமாகப் புரிந்து கொண்டு அவர்களை வழிநடத்துவதே இன்றைய பெற்றோர்களுக்கான மிகப் பெரிய சவால்.  உங்களால் முடியவில்லை என்றால், அவர்களோடு பழகும் அவர்களது அறிவுசார் தலைமுறை வயதினர் மூலம் புரிய வைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர்களின் அறிவின் வேகத்திற்கு அவர்களது தேவைகள் சார்ந்த தேடல்கள் அவர்களை வேறு வழியில் இழுத்துச் செல்லம் சாத்தியக்கூறுகள் மிகமிக அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.       

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top