வயநாடு பழங்குடியினரில் முதல் பெண் கலெக்டர்! வறுமையைக் கடந்து வெற்றி பெற்றுள்ள இளம் பெண்!
  • 12:03PM Apr 06,2019 Wayanad
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:03PM Apr 06,2019 Wayanad

கேரள மாநில வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-கமலம் தம்பதியினர். ஆதிவாசி தம்பதிகளான இவர்களுக்குத் தற்போது 26 வயதில் ஸ்ரீதன்யா என்ற மகள் உள்ளார். ஆரம்பத்தில் இவர்கள் கரையான் அரித்த ஓலை கூரை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சிறுவயதில் தனது குடும்பத்தின் நிலையைக் கண்டு வருந்திய ஸ்ரீதன்யாவுக்குக் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

Image result for kerala tribal sridhanya

அதன்பின் தனது கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக அயராது படிக்கத் தொடங்கினர். இவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட பெற்றோரும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். இவருக்குச் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது மகளின் லட்சியத்திற்காக ஸ்ரீதன்யாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி ஸ்ரீதன்யாவை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் தனது சிவில் சர்வீஸ் தேர்வுகளை முடித்துத் திரும்பிய ஸ்ரீதன்யா குடும்பச் சூழ்நிலைக்காக வயநாட்டில் கூலி வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் சிவில் சர்வீல் தேர்வு முடிவு வெளியானது.

இதில் 410 ரேங்க் பெற்று தன்யாஸ்ரீ வெற்றி பெற்றார். வயநாடு மாவட்டத்தில் வசிக்கும் ஆதிவாசிகளில் ஸ்ரீதன்யாவே பெண் கலெக்டராக ஆகியுள்ளார். ஸ்ரீதன்யாவின் இந்த வெற்றியை வயநாடு ஆதிவாசிகள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர். வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடவுள்ள ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து கூறியுள்ளார். அவர் கூறுகையில்,"ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரது கனவை நினைவாக்க உதவியுள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top