Misc

#Kerala: எந்தப்பக்கம் போனாலும் கேரள சேட்டான்கள் வெற்றி காண்பது எப்படி? கார்பரேட்களையும் கண்ணீர் விட வைத்த தந்திரம்!

Aug 10 2020 01:39:00 PM

சொந்த ஊரைத்தாண்டி, வெளியூரில் தொழில் செய்து வெற்றிகரமாக நடத்தும் தந்திரத்தை, கேரள சேட்டான்களை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். கேரள மக்கள் நல்ல உழைப்பாளிகள் தான், ஆனால் அவர்கள் ஊரில் அல்ல. கடவுளின் தேசம், அழகான பெண்கள் வாழும் ஊர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அதையெல்லாம் தாண்டி சில சுவாரஸ்யமான உண்மைகள் இன்னும் நிறைய இருக்கு. ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட கேரள மக்களைப்பற்றிய சில தகவல்கள் பிரம்மிக்க வைக்கின்றன.

tea kerala business

இந்தியாவிலேயே அதிக எழுத்தறிவும், அதிக ஆயுட்காலமும் கொண்டவர்களாக இருந்த போதிலும், அதிக மொடாக்குடிகாரர்கள் இருப்பதும் அங்கு தான். வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டு வேலையில் இருப்பார்களாம். நாட்டிலேயே அதிக நகை வாங்குவது கேரள மக்கள் தான். இந்தியா முழுக்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் இலாபம் பார்க்க முடியாமல், தவிடு தின்னும் நிலையில், கேரளாவில் மட்டும் இலாபம் ஈட்டிக்கொடுக்கிறதாம். நாடு முழுக்க கோலோச்சும் கார்பரேட் நிறுவனங்களின் வியாபார தந்திரம் கேரளாவில் மட்டும் எடுபடுவதில்லை.

tea kerala business

சென்னைக்கு மிக அருகில், செங்கல்பட்டு பக்கத்தில் என்று சொல்லி விற்கப்படும் அபார்ட்மென்ட் வியாபாரம், கேரளாவில் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் எடுபடாதாம். பெங்களூரு, சென்னையில் ஒலா, யூபர் நிறுவனங்கள் வெற்றி கண்ட அளவுக்கு, கேரளாவில் இலாபம் ஈட்டமுடியவில்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக பின்பற்றப்படும் வியாபார தந்திரங்கள் கேரளத்தில் ஒரு அடி எடுத்து வைக்கவே டப்பா டேன்ஸ் ஆடுது.

tea kerala business

கோவாவிற்கு அடுத்து வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் குறைவாக இருப்பது கேரளத்தில் தானாம். சிங்கப்பூர், ஸ்வீடன், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தங்கத்தை விட கேரளத்தில் இருக்கும் தங்கம் அதிகம். கேரளாவை தலைமையிடமாக கொண்ட தங்க கடன் வழங்கும் நிறுவனங்களின் தயவால், பல டன் தங்க இருப்பு கேரளத்திடம் உள்ளது. நாட்டிலேயே பெரிய பணக்கார கோவில் அங்கு இருப்பதோடு, அதிக சொகுசு கார்கள் உள்ள மாநிலமாக விளங்குகிறது. எங்கு சென்றாலும், அவர்களுக்குள் உதவுவதில் கெட்டிக்காரர்கள். அந்த ஒற்றுமை மூலம் உண்டான தொழில் நெட்வொர்க்கால், மாநிலம் தாண்டி, நாடு தாண்டி, கண்டம் தாண்டி சென்றாலும், அவர்களால் தொழிலில் கொடி கட்டிப்பறக்க முடிகிறது.