Lushgreen

இந்த இடத்தில் இருக்கும் பெண்கள் மட்டும் வசீகரமாக தோன்றுவதன் ரகசியம் என்ன? இங்கிருக்கும் பெண்களின் அழகிய தோற்றத்திற்கு இதுதான் காரணமாம்!

May 04 2021 09:43:00 AM

எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் இயற்கை வளம் மிகுந்த கேரளாவில் இருந்து வரும் பெண்கள் கொள்ளை அழகுடன் மினுமினுப்பாக இருப்பார்கள். வெள்ளை தேவதை போன்ற சருமம், கண்களை கவரும் முகபாவனை மற்றும் சிக்கென்ற உடலமைப்பு என எல்லா விஷயத்திலும் கேரளப்பெண்களை தனியாக அடையாளப்படுத்த முடியும்.

kerala-girls-beauty

கேரளாவில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அனுபமா, அமலா பால், மஞ்சிமா மோகன், மடோனா செபாஸ்டியன், நஸ்ரியா, அசின் என்ற ஏகப்பட்ட ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து பிரபலமானவர்களாக வலம் வருகின்றனர். கேரளாவின் இயற்கையான அழகு எப்படி கேரள பெண்களுக்கு வருகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

kerala-girls-beauty

கேரளாவில் உள்ள பெண்கள் அன்றாடம் பாதாம் மற்றும் ஆலிவ் ஆயில்களை பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணெயில் புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சருமம் அழகாகவும், பொலிவாகவும் இருப்பதுடன் முகத்தில் சுருக்கங்கள் வருவதும் குறைகிறது. இங்கு வசிக்கும் பெண்கள் தேங்காய் எண்ணையுடன் மருதாணி இலைகளை போட்டு கொதிக்க வைத்து பிறகு அதை தங்களுடைய கூந்தலில் தடவுவார்கள். இதனால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

kerala-girls-beauty

கேரள பெண்களின் அழகின் ரகசியங்களுள் முக்கியமானது நல்பமரடி எண்ணெய். இந்த எண்ணெய் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சரும வறட்சியை போக்கவும் பயன்படுகிறது. இதனால் சருமம் மென்மையடையும். மற்றொரு முக்கியமான பொருள் தான் கும்குமாடி தைலம். இந்த மூலிகை குங்குமப்பூ எண்ணையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்த பிறகு கழுவினால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கி முகம் பொலிவாக இருக்கும். கேரள பெண்கள் உதடுகளுக்கு வெண்ணெய் தடவி உலராமல் பார்த்துக்கொள்வார்கள்.

kerala-girls-beauty

இங்கு வசிக்கும் பெண்கள் தங்கள் கண்களை அழகாக பராமரிக்க கன்மாஷி என்று அழைக்கப்படும் ஒரு பாரம்பரியமிக்க கண் மையை தாங்களே தயாரித்து பயன்படுத்துகிறார்கள். இப்படி பல்வேறு இயற்கை மூலிகை பொருட்களின் கலவையை பயன்படுத்துவதால் தான் கேரளாவில் உள்ள பெண்களும் அங்கிருந்து சினிமாவுக்கு வரும் ஹீரோயின்களும் கொள்ளை அழகுடன் தோன்றுகின்றனர்.