Shoreline

இந்த பயலுக்கு இவ்வளவு கிராக்கியா? எல்லாரும் தூக்கி கொண்டாடும் அளவுக்கு இந்தப்பய அப்படி என்னத்த பெருசா கி ழிச்சிட்டான்?

Jul 03 2021 06:43:00 PM

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் சமீபத்தில் நடந்தவேலை செய்யும் நாய் ஏலத்தின் போது ஒரு சிறப்பு ஆஸ்திரேலிய கெல்பிக்கான ஏலம் அனைத்து எதிர்பார்ப்பையும் தாண்டி ஒரு நாயின் மிக உயர்ந்த விலையின் முந்தைய தேசிய சாதனையை முறியடித்தது. 35,200 ஆஸ்திரேலிய டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 19,89,152 ரூபாய் என்ற மகத்தான விலையில் விற்கப்பட்டுள்ள ஹூவர் என்ற கெல்பி நாய் இப்போது ஆஸ்திரேலியாவில் மிகவும் விலையுயர்ந்த வேலை செய்யும் நாய் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.

kelphi-dog australia working-dog-breed

பெரும்பாலும் செம்மறி ஆடுகள், கால்நடைகள் மற்றும் ஆடுகளை பராமரிக்கவும் மேய்க்கவும் உதவிகரமாக இருப்பதோடு கால்நடைகளுடன் சேர்ந்து வேலை செய்வதிலும் கெட்டிக்காரத்தனம் மிக்கதாக கெல்பி நாய்கள் இருக்கிறது. ஹூவர் என்ற அந்த நாய் சாரா மற்றும் அவரது கணவர் டேவிட் லீ ஆகியோருக்கு சொந்தமானது. அவர் அந்த நாயை பிறந்து நான்கு மாதங்களாக  இருந்தபோது ஒரு நண்பரிடமிருந்து வாங்கியுள்ளார்.

kelphi-dog australia working-dog-breed

இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா தனது சிறு வயதில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இப்போது தனது கணவர் லீவுடன் விக்டோரியாவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். ஹூவர் பெற்ற மகத்தான விலை குறித்த செய்திக்கு பதிலளித்த சாரா இந்த கெல்பியைப் பற்றி ஏதேனும் சிறப்பு இருப்பதை அவர்கள் எப்போதும் அறிந்திருப்பதாகவும் அது ஒரு நல்ல வீட்டிற்குச் செல்வது குறித்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

kelphi-dog australia working-dog-breed

இந்த நாய் அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கிய இடத்தை பிடித்திருந்த காரணத்தினால் தற்போது அதை பிரிவது என்பது மிகவும் வருத்தமளிக்கும் தருணம் என்று சாரா தெரிவித்துள்ளார். ஒரு நாய் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது உண்மையில் மிகவும் ஆச்சர்யமான நிகழ்வு தான் நண்பர்களே. நம்ம ஊருல இருக்குற நாய்களையெல்லாம் சும்மா குடுத்தா கூட ஒருத்தரும் வாங்க மாட்டாங்க. இவங்க நாட்டுல நடக்குறது நமக்கு அதிசய நிகழ்வைப்போல தெரிகிறது.