Rainforest

விஜய் சேதுபதியின் மகள் இவருக்கு ஜோடியாக நடிக்க போகிறாரா! இந்த மிகக்குறைந்த வயதில் இவருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா?

Apr 20 2021 09:29:00 AM

தெலுங்கில் வெளியான உப்பேனா படம் மூலம் அறிமுகமானவர் க்ரித்தி ஷெட்டி. இந்த படம் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெற்றியடையவே ஒரே படத்தில் பேசப்படும் நடிகையாக உயர்ந்து விட்டார் க்ரித்தி ஷெட்டி. இந்த படத்தில் இவருக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவருடைய மிரட்டலான நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

keerthi-shetty

தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. பாலாஜி மோகன் இயக்கத்தில் ஏற்கனவே மாரி, மாரி 2 படங்களில் தனுஷ் நடித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் நாடு திரும்பியதும் இந்த படம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

keerthi-shetty

வெறும் 17 வயது மட்டுமே நிரம்பிய சிறிய பெண்ணான க்ரித்தி ஷெட்டி தமிழ் சினிமாவில் அறிமுகமானால் நிச்சயம் கொண்டாடப்படும் நடிகையாக மாறிவிடுவார். இவருக்கு தனுஷ் பட ஜாக்பாட் அடிக்கப்போகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.