Lushgreen

இயற்கையின் அழகு சற்றும் குறையாமல் இருக்கும் இந்த இடம் நிச்சயம் சொர்க்க பூமி தான்! இந்த இடத்தையாவது எதுவும் செய்யாமல் கொஞ்சம் அப்படியே விடுங்கப்பா!

Jun 11 2021 11:40:00 AM

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இயற்கையால் சூழப்பட்டுள்ள காடுகளும், மலைகளும், நதிகளும் அமைந்து காணப்படுகிறது. ஆனால் மனிதனின் ஆக்கிரமிப்பு காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வீடுகளும், தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டு இயற்கை சூறையாடப்பட்டு வருகிறது. இருப்பினும் பூமியில் இன்னமும் ஒரு சில இடங்கள் எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் அமைதியாகவும், பிரச்சனைகள் இன்றியும் அமைந்துள்ளது சற்று ஆறுதல் தரக்கூடிய வகையில் இருக்கிறது.

kavai-beach

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் இயற்கை அழகு மிகுந்த ஒரு தீவு தான் கவாய். இந்த தீவில் தொழிற்சாலைகள் எதுவும் அதிகமாக அமைக்கப்படவில்லை.இதன் காரணமாக இயற்கை எந்த வித பாதிப்புகளும் இன்றி எப்போதும் போல இருக்கிறது. அழகான இந்த தீவை சுற்றி பசுமை நிறைந்த மலைகளும், நீர்வீழ்ச்சிகளும் அமைந்து இயற்கை எழிலுடன் காணப்படுகிறது.

kavai-beach

இந்த தீவில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட கடற்கரைகள் அமைந்துள்ளது, இதனால் நீர்விளையாட்டுகளை அனுபவிக்க தகுந்த இடமாக இந்த கவாய் தீவு அறியப்படுகிறது. ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான இந்த தீவு சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம் போன்ற அனுபவத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த தீவை போல உலகில் உள்ள எல்லா காடுகள் மற்றும் மலைப்பிரதேசங்களும் மக்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருந்தால் இயற்கை வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.

kavai-beach