ஊரே முட்டாளாக இருந்தால், ஆரசாங்கம் என்ன செய்யமுடியும்!
  • 13:17PM Dec 06,2018 Chennai
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 13:17PM Dec 06,2018 Chennai

கர்நாடகாவில் HIV நோயாளி ஒருவர் அங்குள்ள ஏரியில் தற்கொலை செய்துகொண்டதால், அந்த ஏரியில் உள்ள நீரை மாற்றவேண்டும் என்று அடம்பிடித்த ஊர்மக்கள்! கர்நாடக மாநிலம், தார்வாடு மாவட்டத்தில் மோராப கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகள் கழித்து இவருக்கு HIV நோய் இருப்பது தெரிந்ததும், அவரது கணவரை இவரை வீட்டை வீடு அனுப்பிவிட்டார். இதனால் தனது சொந்த ஊருக்கே திரும்பி வந்தார் ஐஸ்வர்யா. ஆனால் அவரது தாய் உட்பட அனைவரும் ஐஸ்வர்யாவை ஒதுக்கி வைத்தனர். அவரை தீண்டத்தகாதவராக எண்ணி அவர் இருக்கும் பக்கமும் யாரும் செல்லவில்லை. ஐஸ்வர்யாவை அவரது தாயார் வீட்டின் கொல்லைப்புறத்தில் தங்கவைத்தனர். இதனால் பெரும் மனவேதனை அடைத்த ஐஸ்வர்யா அந்த ஊரிற்கு குடிநீருக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

சில நாட்கள் கழித்து காவல் துறையினர் அந்த ஏரியில் மிதந்த அவரது பிணத்தை மீட்டெடுத்தனர். அந்த பெணின் சடலத்தைப் பார்த்த ஊர் மக்கள், இந்தப் பெண்ணால் அந்த ஏரியின் தண்ணீரில் HIV பரவி இருக்கும். அந்தத் தண்ணீரை முழுவதுமாக மாற்றவேண்டும் என்று முறையிட்டனர். முதலில் இதைக் கேட்ட அதிகாரிகள் அந்த ஊர்மக்களிடம் தண்ணீரில் HIV பரவாது என்று கூறினார்கள். ஆனால் அந்த ஊர்மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு சுகாதார துறையினருடன் அந்த ஊர் பஞ்சாயத்தை கூட்டினார்கள். அப்போது சுகாதார துறையினர் விளக்கிக் கூறியும் ஊர் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நீர் வள மேலாண்மைக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் மனுகொடுத்ததால் வேறு வழி இன்றி அந்த ஏரியின் தண்ணீரை மாற்றினார்கள்.

Tags

Share This Story

Top