Misc

காமராஜர் ஆட்சியில் இருந்திருந்தால் இன்னும் நிறைய அணைகளை கட்டி இருப்பார்கள் என்று சொல்கிறார்கள்! இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஏன் திராவிட கட்சிகளால் சென்னையில் ஒரு அணையை கட்ட முடியவில்லை?

Jun 11 2021 07:48:00 PM

தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்வர்களில் மக்களில் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்தவர் என்றால் அது காமராசர் மட்டுமே. மக்களுக்கு என்ன தேவை, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல என்ன மாதிரியான திட்டங்களை செயல் படுத்த வேண்டும் என்று எல்லாத்தையும் பார்த்து பார்த்து மக்களுக்கு நல்லது செய்தார்.

kamaraj dam chennai

காமராஜர் ஆட்சி செய்த காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 9 அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்றும் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கக் காரணம் காமராஜர் கட்டிய அணைகள் தான். காமராஜரின் ஆட்சிக்குப் பிறகு இன்றுவரை தமிழகத்தை திராவிடக்கட்சிகள் தான் மாற்றி மாற்றி ஆட்சி செய்துவருகின்றன. இதுநாள் வரை சென்னையில் ஒரு அணைகூட திராவிடக் கட்சிகள் கட்டவில்லை. இதுதான் திராவிட ஆட்சியா என்று யோசிக்கத்தோன்றும்.

kamaraj dam chennai

அணை கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணை மேட்டூர் அணை. மூன்று பக்கம் மலைப்பகுதிகளாலும், ஒரு பக்கம் கட்டுமானம் இருந்தால் மட்டும் தான் அந்த அணை நல்ல புவியியல் அமைப்புடன் இருக்கும். மேட்டூர் அணையும் இதுபோன்ற நல்ல புவியியல் அமைப்புடன் இருப்பதால் தான் இன்று வரை திடகாத்திரமாக இருக்கிறது.

kamaraj dam chennai

அதேபோல கல்லணை என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னரால் சிறந்த கட்டுமான பொருட்களின் உதவியோடு கட்டப்பட்டது. அதன் புவியியல் அமைப்பு வேறு என்றாலும் அந்த காலத்தில் கல்லணையை சிறப்பாக கட்டி முடித்தனர். ஆனால் சென்னை என்பது மக்கள் அதிகம் வசிக்கும் மிகப்பெரிய நகரம். இங்கே அடிக்கடி அதிக அளவில் மலை பெய்தாலும் அந்த மழை நீரை சேமிக்க முடிந்த அளவுக்கு நம் திராவிடக் கட்சிகளால் ஏரிகள் கட்டப்பட்டுள்ளன.

kamaraj dam chennai

இந்த மாதிரி சென்னை போன்ற புவியியல் அமைப்பு கொண்ட இடங்களில் ஆணை கட்டுவது என்பது யாராலும் முடியாத செயல். இதனால் தான் இதுவரை சென்னையில் இதுவரை ஏரிகள் கட்டவில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதில் திராவிடக்கட்சிகளின் த வறு என்று ஏதும் இல்லை எனவும் சொல்லபடுகிறது.

kamaraj dam chennai