Lushgreen

ரஜினியை கொண்டாடும் அளவிற்கு கமலை நாம் ஏன் கொண்டாடவில்லை! இத்தனை புகழுக்கு சொந்தமான ஆளை நம்ம கண்டுக்காம விட்டுட்டோமே!

Oct 12 2021 04:43:00 PM

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை நம்மால் கொண்டாடப்படும் நடிகர்களில் முதன்மையாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். ரஜினிகாந்த் அடைந்த புகழை கமலஹாசன் எட்டா விட்டாலும் இன்று வரை அவர் ரஜினிக்கு சமமாகவே பார்க்கப்படுகிறார். ரஜினியே பல மேடைகளில் கமல் இல்லை என்றால் இந்த ரஜினிகாந்த் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அன்று மட்டும் கமல் என்னை தனியாக ஹீரோவாக நடியுங்கள் என்று சொல்லாமல் இருந்திருந்தால் இப்போ உங்க முன்னாடி நான் சூப்பர் ஸ்டாராக நிற்க முடியாது என்று ஓப்பனாகவே ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.

rajini kamal pugal all pover world

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நாயகன் கோமணத்துடன் தைரியமாக நடித்தது கமலஹாசன் மட்டுமே. முதல்வன் படத்தில் ஜட்டியுடன் நடிக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக விஜய்யும், நான் கடவுள் படத்தி ஜட்டியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக அந்த படத்தை அஜித்தும் ரிஜெக்ட் செய்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஐந்து வயதில் நடித்ததற்கு பிளைமவுத் கார் சம்பளமாக கேட்டவர் நம்ம உலக நாயகன் மட்டுமே.

rajini kamal pugal all pover world

நிறைய வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் இவர் தான். சொந்த குரலில் நிறைய பாடல்கள் பாடியவர் நம்ம உலக நாயகன் மட்டுமே. சினிமாவில் சம்பாதித்த எல்லா காசையும் சினிமாவிலேயே தொலைத்ததும் இவர் தான். பன்ச் டைலாக் பேசாமல் ரியாலிட்டியாக படம் எடுப்பவர் நம்ம கமலஹாசன்.

rajini kamal pugal all pover world

இன்றுவரை வரி ஏய்ப்பு செய்யாமல் முறையாக அரசுக்கு வரி கட்டி வருகிறார். சமுதாயத்தில் நடக்கும் நிறை, குறைகளை பளிச்சென்று சினிமாவில் காண்பிப்பவர் இவர் மட்டுமே. வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு காட்சியில் உண்மையாகவே முதுகில் அடி வாங்கி நிலை தடுமாறி கிழே விழுவார். தான் நடிக்கும் படங்களில் தனக்கென டூப் போடாத நடிகர்களில் இவரும் ஒருவர். வெற்றி, தோல்வி என்பது இரண்டாம் பட்சம், நான் கண்டிப்பா வருவேன் என்று சொல்லி தன்னுடைய வாக்கை மக்களுக்கு காப்பாற்றி அரசியலில் கால் பதித்தவர் தான் நம்ம கமல். மக்கள் எல்லோரும் மசாலா சினிமாவிற்கு அடிமையாகி இவரைப் போன்ற ஒரு நல்ல கலைஞனை கண்டுகொள்ளாமல் இருந்தது நம்ம செஞ்ச தப்பு தான்.

rajini kamal pugal all pover world