கக்கூஸ் : உண்மை மனிதர்கள் நிஜமாக மீட்கப்படுவார்களா???
  • 11:29AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:29AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

காலையில் தற்செயலாக ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அதில் பெண் இயக்குநர் திவ்யபாரதி எடுத்துள்ள கக்கூஸ் எனும் ஆவணப்படம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலக அரங்கில் திரையிடப்பட்டதாகப் படித்தேன். சில மாதங்களுக்கு முன் ஒரு புதிய வெற்றிப் பட இயக்குநர், இதே போல் ஒரு விழாவில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க உரையாற்றியுள்ளார்.  எனக்கன்னவோ இவ்வாறான செய்திகளை படிக்கும்போதெல்லாம் சாதிய ரீதியான தங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ளவே இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒருவகையில், இந்த ஆவணப் படத்தை எடுத்த இயக்குநரைப் பாராட்டியே ஆக வேண்டும்.  ஏனெனில், மனிதன் மலத்தைக் கையால் அள்ளும் மனிதர்களால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கத்தால், தன்னால் முடிந்ததை அவர் செய்துவிட்டார். தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் மட்டுமே கவனமாக இருப்பவர்களுக்குப் பிரச்சினை இருக்கிறதென்று தெரியும்.  ஆனால், தீர்த்து வைக்க வழி தேட மாட்டார்.  திவ்யபாரதி அவர்களைப் போல் நில்லாமல், உண்மையான வலியுடன் முதல் அடி வைத்திருப்பது மகிழ்ச்சியே!!!

இந்தப் பிரச்சனை தீர என்னதான் வழி???

முதலில் என்ன வழி செய்தாலும், அது அந்த மனிதர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.  இரண்டாவது, என்ன வழி செய்வது என்பதே தெரியாமல் இருப்பது.  செய்யக் கூடியது: வெளிநாட்டில் உள்ள தொழில்நுட்பத்தினை அனைவரும் ஒன்று சேர்ந்து, இரண்டு மூன்று மாநகராட்சியில் நிறுவுவதும், அதை அங்கு மலம் அள்ளும் பணியை தற்போது செய்து வரும் பணியாளரிடமே ஒப்படைப்பதும்.  காரணம் இரண்டு.  ஒன்று வேறு வேலை தெரியாத காரணத்தால் பணியிழப்புக்கு ஆளாகாமல் தப்பிக்க நேரும், இரண்டு எப்படியும் வேறு எவரும் வரப்போவது இல்லை.  ஆனால், மாறுபட்ட சுகாதார நிலை அவர்களுக்குத் தற்போது ஏற்படுத்தப்படுவதுடன், உயிரிழப்புகளையும் தவிர்க்க இயலும். 

அவர்களின் பிள்ளைகளின் விருப்பப்படியான படிப்பு பெற வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்களுக்கு நிரந்தரமான பணிமாறுதலைக் கொண்டு வரும்.  அப்போதுள்ள தொழில்நுட்பத்தில், தானியங்கிகள் இவர்களில்லாத நிலையைச் சமாளிக்கும்.  இரண்டு, மூன்று மாநகராட்சிகளில் நமது பணத்தில் செயல்படுத்தினால், விரைவில் அரசே மற்ற இடங்களில் இதனைச் செயல்படுத்த ஆவண செய்ய வாய்ப்பிருக்கிறது. இதை விடுத்து, கூட்டங்கள் போடுவதாலோ, அந்த ஆவணப்படத்தை உலகில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாய் கொடுப்பது போலவோ திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தால் எனது பதில் ஒன்றே ஒன்றுதான்.  உங்கள் தலைவன் யாராக இருந்தாலும், முதலில் அவரை மாற்றுங்கள்… அவர்கள் இருக்கும் வரையில் நீங்கள் மட்டுமல்ல உங்கள் சந்ததிகளும் மலம் அள்ளிக் கொண்டேதான் இருக்க வேண்டும்!!!

 

 

 

    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top