#Kabaddi கில்லி விஜய மிஞ்சிட்டியே டா! வேற லெவல் தம்பி நீ - இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!
  • 21:43PM Oct 29,2019 Chennai
  • Written By public
  • Written By public
  • 21:43PM Oct 29,2019 Chennai

கோலியாத் - தாவீது கதையை அறிந்தவர்களுக்கு வலியவனை எளியவன் சுலபமாக விழித்திவிடலாம் என்பது பற்றித் தெரியும். ஆனால் இதை உண்மையாகும் மற்றொரு சம்பவம் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. ட்வீட்டரில் செல்வம் அரசுப் பள்ளி ஆசிரியன் என்பவர் இந்த விடியோவை பதிவிட்டுள்ளார். அரசு பள்ளியில் நடந்த கபடி போட்டியில் இரு அணிகள் மோதின, இதில் இரண்டாவது சுற்றில் எதிர் அணியைச் சேர்ந்த வலிமையான வீரர் ஒருவர் முன்னேறி சென்றார். இந்த அணியில் 5 பேர் மேல் இருந்தும், எதிர் அணியில் இருந்த வீரர் தனது பலம் மேல் அதிக நம்பிக்கை வைத்து விளையாடினர்.

#Hijab எதிர் அணியாக இருந்தாலும் தக்கசமயத்தில் உதவிய வீராங்கனைகள் - சிலிர்க்கவைக்கும் வீடியோ!

Confident Matters!

இந்த அணியில் இருந்த வீரர்கள் முதலில் அவரை வளைத்து போட முயற்சித்தனர், ஆனால் அவரை இழுக்க முடியவில்லை. அந்த எதிர் அணி வீரர் உடனே கோட்டிற்கு அருகில் நின்றுகொண்டார். தன்னைப் பிடிக்கவந்தால் அப்படியே இழுத்துப்போட்டு ஆட்டத்தை முடித்து விடலாம் என்று எண்ணினார். ஆனால் அவரை விட வலிமை குறைவான ஒருவர் அவரைப் பிடிக்க வந்தார். இந்த வலிமையான வீரர், எப்படியும் அவனை விழித்திவிடலாம் என்று எண்ணினார். ஆனால் அங்கிருந்த யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அந்த வலிமையே இல்லாத வீரர் அந்த எதிரணி வீரரை சுலபமாக வளைத்து போட்டு அவரைத் தோற்கடித்தான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் அந்த வலிமை குறைந்த வீரனை பாராட்டி வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top