Misc

முன் ஜென்மம் இருப்பது உண்மையா? கைரேகை ஜோசியம் பார்த்து முன்ஜென்மம் பற்றிய உண்மைகளை விளக்கிய ஜோசியர்!

Sep 17 2021 12:47:00 PM

முன்ஜென்மம் இருப்பதெல்லாம் சுத்தப் பொய் என்று நிறைய மக்கள் சொல்கிறார்கள். ஜாதகம், ஜோசியம் சொல்பவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடி அடிச்சு விடுகிறார்கள் என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம். நண்பர் ஒருவர் ரொம்ப நாட்களாக குடும்ப க*ஷ்டத்தில் இருந்தார். வேலை கிடைக்காமல் குடும்பத்தை சரியாக ஓட்ட முடியாமல் தவித்து வந்தார்.

jathagam josiyam munjenmam

பக்கத்துல ஜாதகம் நல்லா பாக்குற ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட போய் கேட்டுப்பாக்கலாம் என்று சென்றிருந்தோம். ஜாதகம் சொல்லும் நபருக்கும், நண்பருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இவருடைய ஜாதகத்தை முழுசா அந்த ஜோசியம் பார்க்கும் நபர் பார்த்துவிட்டார். போன ஜென்மத்தில் நண்பர் அய்யராக இருந்ததாகவும், அவரிடம் வேலை பார்த்த நபர்களுக்கு சரிவர சம்பளம் தராமலும் இருந்துள்ளார்.

jathagam josiyam munjenmam

இவரிடம் வேலை பார்த்த ஒரு கர்ப்பிணி பெண்ணை வ*யிற்றில் எட்டி உ*தைத்து அந்த பெண்ணின் கர்ப்பம் கலைய காரணமாக இருந்துள்ளார். அந்த பா*வம் தான் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது என்று சொன்னார். இதை எல்லாம் கேட்ட நாங்க அந்த ஆள் வாய்க்கு வந்தபடி அள்ளி விடுறான், நீ எதுவும் நம்பாத என்று நண்பருக்கு தைரியம் சொல்லி அனுப்பினோம்.

jathagam josiyam munjenmam

பின்னர் ஒரு நாள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஓலைச்சுவடி ஜாதகம் பார்க்க சென்றோம். அங்க காசு தான் கொஞ்சம் அதிகம் வாங்குவாங்க. ஆனால் அவங்க சொல்லும் விஷயம் சரியாக இருக்கும் என்று நம்பிச் சென்றோம். அந்த நபரும் இவர் சொன்னதைப் போலவே போல போன ஜென்மத்தில் நீங்க நம்பூதிரியா இருந்தீங்க, உங்களிடம் வேலை பார்த்த நபர்களுக்கு சம்பளம் கொடுக்க மாட்டிங்க. ஒரு கர்ப்பிணி பெண்ணை வ*யிற்றில் எட்டி உதைத்த பா*வம் தான் உங்களை இந்த ஜென்மத்திலும் வாட்டி வதைக்கிறது என்று சொன்னார்.

jathagam josiyam munjenmam

ரெண்டு பக்கமும் சொன்ன விஷயம் ஒன்றுதான். இவங்க ரெண்டு பேருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்புறம் எப்படி ஒரே விஷயத்தை ரெண்டு பேரும் சொல்லுறாங்க என்று குழம்பிப் போனோம். அப்போதான் எங்களுக்கு தெரிஞ்சுது இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் உண்மை, முன்ஜென்மம் இருப்பதும் உண்மை தான் என்று. அதுக்குப் பிறகு அவங்க சொன்ன பரிகாரம் எல்லாம் செஞ்சு முடிச்ச பின்னர் இப்போ நண்பர் கொஞ்சம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

jathagam josiyam munjenmam