#jobsearch: அடிப்படை தகுதி 10-ஆம் வகுப்பு, அரசு வேலைக்கு ஒரு வாய்ப்பு!
  • 21:06PM Oct 10,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:06PM Oct 10,2019 Chennai

மத்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான CISF-ல் Constable (Tradesmen) பணிக்கான 914 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கான தகுதிகள் மற்றும் கல்வி பின்வருமாறு,

#1. மொத்த காலியிடங்கள் முறையே  914.  வயது வரம்பு , 8 முதல் 23 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

#2. ஊதியம் முறையே 1,700 - 69,100. முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்

#3. 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவில் ITI படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும் இல்லையெனில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

#4.  எழுத்துத் தேர்வு , தொழிற் திறன் தேர்வு அதனை தொடர்ந்து  உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

#5. உடற்தகுதி, உயரம் முறையே 170 செ.மீ இருக்க வேண்டும். ST பிரிவினருக்கு  - 162.5 செ.மீ இருக்க வேண்டும்.

#6. மார்பளவு முறையே 80 செ.மீ. அகலமும் 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். ST பிரிவைச் சேர்ந்தவர்கள்  76 செ.மீ. அகலமுள்ள மார்பளவுடன் 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 

#7. அடுத்ததாக 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6.30 நிமிடத்தில் ஓடியிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் பெரும்பாலும்  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

#8. விண்ணப்பக்கட்டணம் முறையே,  ரூ.100.இதனை IPO  (Indian Postal Order) ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
IPO எடுக்க வேண்டிய முகவரி:  “Assistant Commandant, DDO, CISF. SZ HQrs, Chennai. SC/ ST பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது 

#jobsearch, www.cisfrectt.in என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட்  செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி பின்வருமாறு,  The DIG, CISF(South Zone) HQrs, “D” Block, Rajaji Bhavan, Besant Nagar, Chennai - 600090, Tamilnadu. 22.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top