#LIC: அடிப்படை கணினித் திறனுடன் இந்த படிப்பை முடிந்திருந்தால் உங்களுக்குத்தான் வேலை!
  • 10:55AM Mar 04,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 10:55AM Mar 04,2020 Chennai

தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். 

#1. உதவி மேலாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் இளநிலை சட்டப்படிப்பில் 55%(Under graduation) மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினித் திறன் அவசியமாகும்.

#2. இந்த பணிக்கு வயதுவரம்பானது 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

#3. ஊதியமாக மாதம் ரூ.32,815 அறிவிக்கப்பட்டுள்ளது..இவற்றுடன் கூடுதல்படி சேர்த்து ரூ.56,600 வழங்கப்படும்.

#4. தகுதியுள்ளவர்கள் www.lichousing.com எனும் அதிகாரபூர்வ இணையதள முகவரியை அணுகவும். விண்ணப்பிக்க கடைசி தேதியானது, டிசம்பர் 16 ஆகும். 

#5. தேர்வு முறையானது, ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இவற்றில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.(ஆன்லைன் தேர்வில், நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு)

#LIC, இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் சென்னையில் நடைபெறும். மேலும் பணி குறித்த கூடுதல் விபரங்கள் பெற மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியை அணுகவும். #career: +2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் இப்படி ஒரு வாய்ப்பா? ரூ.80,000 வரை ஊதியம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top