#jobopening: எழுத்துத்தேர்வின்றி இன்றி எளிதாக அரசுப்பணி! இந்த ஒரு தகுதி மட்டும் போதுமானது!
  • 12:15PM Nov 07,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:15PM Nov 07,2019 Chennai

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1234 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பணி குறித்த விபரங்கள் பின்வருமாறு,

#1. பணியின் பெயர் , Village Health Nurse (VHN)/ Auxiliary Nurse Midwife (ANM).இந்த பணிக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 1234.

#2. சம்பளவிகிதம் முறையே ரூ.19,500 லிருந்து ரூ.62,000 வரை எதிர்பார்க்கலாம். இதற்கான வயதுவரம்பானது  18 முதல் 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ SCA/ BC/ BCM/ DNC பிரிவினர்கள் 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  பொதுப்பிரிவைச் சேர்ந்த பிரிவினர்களுக்கு 50 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#3. அடுத்து,  கல்வித்தகுதியாக +2 தேர்ச்சியுடன் Auxiliary Nurse அல்லது Midwife அல்லது Multipurpose health worker பாடப்பிரிவில் குறைந்தது இரண்டு ஆண்டு படிப்பை முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் ரிஜெஸ்டர் செய்திருக்க வேண்டும். 

#4. 15.11.2012 தேதிக்கு முன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட கல்வித்தகுதியை உடையவர்களும்  இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

#5. தேர்ந்தெடுக்கப்படும் முறையானது,  10-ஆம் வகுப்பு மற்றும் +2 நர்சிங் படிப்பில் பெற்றுள்ள  மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

#6. இதனையடுத்து நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும் தேதி தகுதியானவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

#7. விண்ணப்பக் கட்டணமானது பொது/ BC/ BCM/ MBC பிரிவினர்களுக்கு ரூ.600 மற்றும்   SC/ SCA/ ST/ DAP(PH)/ DW பிரிவினர்களுக்கு ரூ.300 ஆகும். இதனை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.

#jobopening , மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி உடையவர்கள்  www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதியானது  13.11.2019.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top