Timeless

இது என்ன இப்படி கூட ஒரு பரிசு தருவாங்களா? எது எப்படியோ இவருடைய திறமை அவருக்கு பிடித்து போய் விட்டது அவ்வளவு தான்!

Jun 03 2021 10:02:00 AM

எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு அவர்களுடைய திறமையை பாராட்டி பரிசு வழங்குவது அந்தக்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. எல்லா நாடுகளிலும் அரசர்கள் கவிஞர்களை பாராட்டி பரிசு வழங்கி வந்திருக்கின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிலும் ஒரு எழுத்தாளருக்கு அவரது படைப்புக்கு ஒரு வித்தியாசமான பரிசு கிடைத்திருக்கிறது. அந்த பரிசு என்னவென்பதை பார்க்கலாம் வாங்க.

jefry-sasar

The Canterbury Tales என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவர் தான் ஜெப்ரி சாசர். இவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவருடைய படைப்புகள் யாவும் அந்தக்காலத்தில் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இங்கிலாந்தில் அப்போது ஆட்சி செய்து வந்த அரசர் மூன்றாம் எட்வர்டுக்கும் இவரது படைப்புகள் பிடித்துப்போகவே அவருக்கு ஏதாவது பரிசு தர விரும்பினார்.

jefry-sasar

சாதாரணமாக ஒரு பரிசை கொடுத்துவிட்டு அதன்பிறகு கண்டுகொள்ளாமல் விடுவதில் அரசருக்கு விருப்பமில்லை. எனவே அரசர் எட்வர்ட் தான் சாகும் வரை ஜெப்ரி சாசருக்கு தினமும் ஒரு  கேலன் மதுவை பரிசாக அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த அளவுக்கு அவரை அரசருக்கு பிடித்துப்போனது. அவர் இறந்த பிறகு அடுத்தது அரியணைக்கு வந்த அரசர் இரண்டாம் ரிச்சர்ட் எழுத்தாளர் ஜெப்ரிக்கு வருடம் ஒருமுறை 20 மார்க் தொகையை பரிசாக அனுப்பினார். அரசர்கள் பலராலும் நேசிக்கப்பட்ட கவிஞராக இருந்தார் ஜெப்ரி சாசர்.