உலகின் No.1 பணக்காரருக்கு டைவர்ஸ் கிடைத்தது, ஆனால் அதற்குக் காரணம் யார்?
  • 11:04AM Jan 11,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 11:04AM Jan 11,2019 Chennai

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ். 54 வயதாகும் இவரின் சொத்து மதிப்பு தற்போது 137 பில்லியன் ஆகும். பல ஆண்டுக்கால உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்குத் தள்ளிய பெருமை இவரையே சேரும். ஆனால் தற்போது உலகளவில் பெரிதாக பேசப்படுவது இவரின் விவாகரத்து விவகாரம் தான்! ஜெப் பெசோஸ்க்கும் அவரது மனைவி மெக்கென்சி பெசோஸ்க்கும் திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இதுமட்டுமின்றி ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்தனர். சில மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் நேற்று இவர்களின் விவாகரத்து பற்றி ட்விட்டர் வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டனர்.

இது இவர்கள் பிரிவின் கதையாக இருந்தாலும், இவர்கள் பிரிவுக்கு யார் காரணம் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? Fox தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்தவர் லாரன் சான்செஸ்(Lauren Sánchez) 3 குழந்தைகளுக்குத் தாயான இவருக்கும், ஜெப் பெசோஸ்க்கும் நீண்ட தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் டேட்டிங் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு நடுவில் நடந்த சில சில்மிஷ சாட்டிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர்களின் விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று அமெரிக்கா மீடியாக்கள் கூறிவருகின்றனர்.

Image result for lauren sanchez with jeff bezos

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top