Highrise

உங்கள் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்க இதை கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்

Apr 07 2021 10:05:00 AM

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சீரகத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். இயற்கை மருந்தாக பயன்படும் இதை மூலிகை குடிநீர் என்றும் கூறலாம்.

jeera-water

சீரகத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த நீரை பருகினால் அது ஆரோக்கியத்தை தரும். தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டால் இந்த தண்ணீரை குடிக்கச்செய்து சரிசெய்து விட முடியும். சீரக தண்ணீரை பருகுவதால் உங்கள் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தல் பராமரிப்பிற்கு உதவும். மேலும் முடி உதிராமலும் பார்த்துக்கொள்ளும்.

jeera-water

சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட சீரகம் கலந்த தண்ணீரை அருந்துவது நல்ல பலன்களை தரும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இதில் அடங்கியுள்ளது. இதனால் அவர்களும் தாராளமாக இந்த நீரை பருகலாம். சீரக தண்ணீருடன் கருப்பட்டி கலந்து குடிப்பதால் நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். வயிற்று வலிக்கும் இதை சிறந்த மருந்தாக உபயோகிக்கலாம்.