Timeless

மரணத்தை வெல்லும் சக்தி படைத்த நகரம் ஒன்று பூமியில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?

Apr 03 2021 09:17:00 PM

ஜப்பான் நாட்டில் உள்ள ஒகினாவா என்ற நகரம் மிகவும் வித்தியாசமானது. ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரைக்கூ தீவுகளை சுற்றி அமைந்துள்ளது இந்த இடம். இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான பகுதியான இது பூமியின் சொர்க்கவாசல் என்று கூட கூறலாம்.

japan-okinwa

இந்த இடத்தில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்க தோன்றும். இது அனைவராலும் கொண்டாடப்பட காரணம் இங்கு வாழும் மனிதர்கள் நீண்ட ஆயுளுடன் நோய்கள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்வது தான். 100 வயதை தாண்டியும் பலர் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 450கும் மேற்பட்டவர்கள் 100 வயதை கடந்து வாழ்கின்றனர். இதன் காரணமாக உலகிலேயே மிகவும் ஆரோக்கியமான இடம் என்று இது அழைக்கப்படுகிறது.

japan-okinwa

நோய் நொடி இன்றி இங்கு இவ்வளவு காலம் இவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் இவர்களுடைய உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை. திருவிழா சமயத்தில் மட்டுமே அசைவ உணவை உண்ணும் மக்கள் தினமும் இயற்கையாக விளையும் காய்கறிகளையும் பழங்களையும் உணவாக எடுத்துக்கொள்கின்றனர். அமைதியான மனநிலையுடன் நேர்மறை எண்ணங்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் மகிழ்வாக வாழும் கலையை பயின்றுள்ளதால் புற்றுநோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற எந்த வித நோய்களும் இங்கு வாழும் மக்களை நெருங்குவதில்லை. இந்த இடத்தை பற்றி கேள்விப்படும்போது நாமும் அங்கு சென்று விட வேண்டும் என்று உங்களுக்கு கண்டிப்பாக தோன்றும்.