#25143ITOKAWA: இந்த ASTEROID-ல் தண்ணீர் இருக்காம்!!! ஜப்பானிய ஆராய்ச்சிச் கோள் HAYABUSA கண்டுபிடிப்பு!!!
  • 16:42PM May 03,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:42PM May 03,2019 Chennai

மனிதன் வேறு ஏதாவது கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று தேடித் திரிந்து கொண்டிருக்கிறான். பூமி ரொம்ப நாள் தாக்குப்பிடிக்காது என்று அவனுக்குப் புரிந்து விட்டது போல, செவ்வாய் கிரகம் தாண்டியும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக பூமிக்கு அருகிலேயே இருக்கும் APOLLO GROUP எனப்படும் விண்கல் கூட்டத்தில் உள்ள ஒரு ASTEROID-ல் (விண்கல்) தண்ணீர் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

#1. 25143 ITOKAWA ASTEROID-ஐ ஆராய்ச்சி செய்வதற்காகக் கடந்த 2003-ம் ஆண்டு ஜப்பானிய ஆய்வாளர்கள் HAYABUSA PROBE என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தினர்.

#2. 1,800 அடி நீளமும், 1000 அடி அகலமும் கொண்ட இந்த ASTEROID சூரியனைச் சுற்றிவர 18 மாதங்களை எடுத்துக் கொள்கிறது.

#3. இந்த ASTEROID-ல் பூமியில் உள்ளது போன்ற தனிம மாதிரிகள், வெப்பநிலை, நிலப்பரப்புகள், தாதுப் பொருட்கள் போன்றவை இருப்பது HAYABUSA முன்னதாக அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

#4. இதனையடுத்து மீண்டும் HAYABUSA PROBE-ன் மூலம் SAMPLE COLLECTION மேற்கொள்ளப்பட்டது.

#5. இரண்டு நாட்களுக்கு முன் இந்த SAMPLE-களை ஆய்வு செய்யும் போது தண்ணீர் இருப்பதற்கான காரணிகள் கண்டறியப்பட்டது.

#6. இதன் மூலம் ITOKAWA ASTEROID-ல் தண்ணீரும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

#7. இதனால், அங்கு மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, மனித இனம் போன்று வேறு ஏதேனும் இனம் வாழ வாய்ப்புள்ளதாக எனவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

#8. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Crew Dragon Trial Success  |  Existence of Aliens in Space  |  Quantum Space Satellite  |  Tourism in Space  |  Keplar Finds Exo-Planets  |

#25143ITOKAWA ASTEROID-ன் அளவில் மனிதர்கள் வாழ முடியாதென்றாலும், விண்வெளியில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. இது இன்னும் இது போன்ற ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று கருதப்படுகிறது. ஆக, பூமிக்கு ஒரு புதிய கிரகம் பார்சல்!!!

Top