#KashmirIssue தலைவரே, மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே! - காஷ்மீர் காவல் துறையினரின் முட்டாள்தனம்!
  • 17:39PM Aug 13,2019 Kashmir
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:39PM Aug 13,2019 Kashmir

கடந்த வாரம் இந்திய ஜனநாயகத்தின் கருப்புத் தினமாக நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸதை நீக்கி சட்டத்திருத்தம் வெளியிட்டார் அமித் ஷா. இது ஆளும் பாஜக கட்சியினரால் வரவேற்கப்பட்டாலும் பெரும்பாலான எதிர்கட்சிகளால் எதிர்க்கப்பட்டது. காஷ்மீர் மக்களிடம் கேட்காமல், அவர்களது முடிவை பற்றி விசாரிக்காமல் மத்திய அரசே தானாக முடிவெடுத்துவிட்டது. இதுமட்டுமின்றி இன்று வரையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரியாதவனம் உள்ளது.

#Shocking Report: அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவரா நீங்க? இதப் படிங்க மொதல்ல!!!

அங்குள்ள மக்களை வீட்டுக் காவலில் வைத்தது மட்டுமின்றித் தொலைத்தொடர்பு அனைத்தையும் நிறுத்திவிட்டனர். வெளிநாட்டுப் பத்திரிகை நிறுவனங்கள், சில இந்திய கட்சி தலைவர்கள் என யாரையும் காஷ்மீர் மாநிலத்தில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அங்குச் சகஜநிலை திரும்பிவிட்டதாக ஜம்மு & காஷ்மீர் காவல் துறையினரின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர், இதுமட்டுமின்றி அதில் புகைப்படமும் பதிவித்துள்ளனர். ஆனால் பிரச்சனையே இங்குதான் தொடங்கியது. அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவல் துறையினரின் மஹிந்திரா SUV கார் பதிவு எண் பீகார் மாநில பதிவு எண்ணுடன் உள்ளது. இதுமட்டுமின்றி இன்றுவரை அங்குத் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிலர் மொபைல் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

#MILKBANK: குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களுக்கு!!! சென்னையிலுள்ள தாய்ப்பால் வங்கி விபரங்கள்!!!

இதனைப்பார்த்த நெட்டிசன்கள், யாரை ஏமாற்றுகிறீர்கள், உண்மையைச் சொல்லாவிட்டாலும் இப்படிப் பொய் சொல்லாமல் இருக்கலாம் என்று ட்வீட் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி அந்தப் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் Blur செய்யப்பட்டிருப்பது மேலும் சந்தேகத்தை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல ஜம்மு & காஷ்மீர் காவல்துறையினர் வெளியிட அனைத்து புகைப்படத்திலும் காரின் நம்பர் ப்ளட் Blur செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபல செய்தி தொகுப்பாளினி Pooja Shali மட்டுமே இந்தப் புகைப்படம் உண்மை என்று கூறியுள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top