Highrise

உடலை ஆரோக்யமாக வைக்கும் ஜாக்கிங் கூட சில நேரத்தில் உடல் பாதிப்புக்கு காரணமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

Apr 05 2021 10:59:00 PM

ஜாக்கிங் என்று சொல்லப்படும் ஓட்டப்பயிற்சி மிகவும் அற்புதமான உடற்பயிற்சி ஆகும். இந்த ஒன்று அனைத்தையும் விட சிறந்தது. நீண்ட தூரம் ஓடி முடித்த பிறகு ஒரு சில செயல்களை செய்யக்கூடாது. அது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.

jagging-issues

உணவே மருந்து என்பது பெரியோர் வாக்கு. எனவே உணவு மிக முக்கியமானதாகும். நீங்கள் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிய பின் கண்டிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. ஓடும் போது வியர்வை அதிக அளவில் வெளியேறும். இதனால் நம்முடைய கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் ஆற்றலானது குறையும். இழந்த ஆற்றலை திரும்ப பெறுவதற்காக தண்ணீரும், உணவும் கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். ஓட்டத்தை முடித்து 30 நிமிடங்கள் கழித்து உணவை உண்ணலாம்.

jagging-issues

நீண்ட தூரம் ஓடியதால் நீங்கள் களைப்பாக உணரலாம். அதற்காக உடனே படுத்து விடக்கூடாது. உங்களை பொறுமையாக ஆசுவாசப்படுத்திக்கொண்டு சிறு சிறு வேலைகளை செய்ய வேண்டும். வியர்வை காரணமாக உங்கள் உடையானது நனைந்திருக்கும். எனவே உடை மாற்றிக்கொள்வது சிறந்தது. ஓட்டத்தை முடித்து விட்டு வந்து பளு தூக்குதல் போன்ற வேறு உடற்பயிற்சிகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. ஓட்டத்தினால் நீங்கள் களைப்பாக இருக்கும் போது வேறு கடின உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். ஓடி முடித்துவிட்டு நீங்கள் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்பது உகந்தது அல்ல. சற்று வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.