Timeless

என்னது வீட்டுலயே வச்சிக்கலாமா? யோவ் நிஜமாத்தான் சொல்லுறீங்களா? இப்படி பண்ணினா குற்றங்கள் குறையும் என்று நினைக்கிறீங்களா?

Sep 16 2021 10:52:00 AM

சட்டம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். ஆனால் ஒருசில குற்றங்களுக்கு எல்லா நாடுகளிலும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும். இப்போது காலம் மாறிவிட்டதால் அதற்கு தகுந்தாற்போல் சட்டத்திலும் மாற்றங்களை செய்து வருகின்றனர். கஞ்சா என்ற வார்த்தையை கேட்டாலே சிலர் தெறித்து ஓடுவாங்க. அந்த அளவுக்கு அதுல ஏகப்பட்ட குற்றங்கள் நடக்குது. இந்த குற்றங்களை தடுக்க என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிஞ்சு இப்படி ஒரு ஐடியாவை இத்தாலி அரசு கண்டுபிடித்துள்ளதாம்.

kancha-plant italy-govt

லண்டன் நகரில் வசிக்கும் ஒரு நண்பர் இந்த செய்தியை எனக்கு கூறினார். அந்த சட்டத்தை கேட்டால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது. இன்னொரு பக்கம் யோசிக்க வைக்கிறது. கஞ்சா குறித்த குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக இத்தாலி அரசு வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளதாம்.

kancha-plant italy-govt

இப்படி ஒரு பிரேக்கிங் நியூஸ் நம்ம நாட்டுல வந்தா எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா? அந்தமாதிரியெல்லாம் யோசிக்காதீங்க. இத்தாலி நாட்டுல அமல்படுத்தியிருக்கும் இந்த சட்டத்தின் படி ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வீட்டில் அதிகபட்சம் நான்கு கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுக்குமேல பயிரிடக்கூடாது.

kancha-plant italy-govt

இதுல இன்னொரு ஆப்பும் வச்சிருக்காங்க. வீட்டுலயே செடி வளர்க்கலாம் என்று சொன்னதால இஷ்டம் போல கஞ்சா வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கக்கூடாது. கஞ்சா கடத்தல் மற்றும் திருட்டுத்தனமாக விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். வீட்டுலயே எல்லாத்தையும் செஞ்சுக்கோங்க. வெளி உலகத்துல ஒழுங்கா இருங்க என இந்த சட்டத்திருத்தம் சொல்கிறது. இந்த சட்டம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்.