Highrise

பீட்ஸாவை வெடிகுண்டு மாதிரி வெடிக்க வைக்கிறாங்களே! இப்படி ஒரு விபரீத விளையாட்டு தேவையா?

Oct 12 2021 05:01:00 PM

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் ஒரு சூப்பரான பீட்ஸா உணவகம் அமைந்துள்ளது. அதன் பெயர் மாடர்ன் அபிஸ்ஸா ஆகும். இந்த உணவகத்தை பத்தி எனக்கு எதுவுமே தெரியாதுங்க. நான் என்ன அமெரிக்காவுலயா இருக்கேன். இதெல்லாம் என்னோட கல்லூரி ஜூனியர் பையன் சொன்ன தகவல். பயபுள்ள என்னைவிட வயசுல சின்னவனாக இருந்தாலும் பயங்கர கெட்டிக்காரன். அதான் அமெரிக்காவுல வேலை பாக்குறான். அமெரிக்காவுல அவனுக்கு பிடித்த பீட்ஸா உணவகம் இது தான் என்று என்னிடம் ஒருமுறை கூறியிருந்தான். இந்த உணவகத்தை பற்றி அவன் என்னிடம் கூறிய சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

modern-apizza italian-bomb

முதலில் இந்த உணவகம் ஸ்டேட் ஸ்ட்ரீட் அபிஸ்ஸா என்று அழைக்கப்பட்டது. இந்த உணவகம் 1934 இல் நிறுவப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், டிராவல் சேனல் நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் ஃபுட் நேஷனின் முதல் அத்தியாயத்தில் ஆடம் ரிச்மேன் இந்த உணவகத்தை பற்றி கூறியுள்ளார். இவரு அந்த நாட்டு உணவு நிகழ்ச்சிகளில் அடிக்கடி வரும் பிரபலமான ஒருவர் என்று அந்தப்பையன் என்னிடம் கூறினான்.

modern-apizza italian-bomb

கனெக்டிகட்டின் கிழக்கு ஹேவனில் தயாரிக்கப்பட்ட ஃபாக்ஸன் பார்க் குளிர்பானங்களையும் இந்த உணவகம் விற்கிறது. இது நியூ ஹேவன்-ஸ்டைல் ​​பீஸ்ஸாவுடன் சேர்த்து சாப்பிட சரியான பானங்கள் என்று பல உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கிளாம்ஸ் கேசினோ (கிளாம்ஸ், பேக்கன் & பெப்பர்ஸ்) இத்தாலிய வெடிகுண்டு (தொத்திறைச்சி, பேக்கன், பெப்பரோனி, காளான், வெங்காயம், மிளகு & பூண்டு) மற்றும் புதிய மொஸெரெல்லா சீஸ் உடன் தயாரிக்கப்பட்ட உணவுகள் இங்கு பிரபலமாக உள்ளன.

modern-apizza italian-bomb

என்னடா தம்பி இத்தாலிய வெடிகுண்டு என ஒரு உணவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதா என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன், பேரு தான் வெடிகுண்டு. ஆனா அது சாப்பிடுற உணவு தான். அதனோட சுவை வாயிக்குள்ள வெடிக்குமாம். அதனால இப்படி ஒரு பெயரை வச்சிருக்காங்க என்று கூறினான்.

modern-apizza italian-bomb

2008 ஆம் ஆண்டில் இரண்டு இளங்கலை பட்டதாரிகளால் நடத்தப்பட்ட சுவை சோதனையில், மாடர்ன் அபிஸ்ஸா முதலிடத்தைப் பிடித்தது. இந்த உணவகம் "சிறந்த பீட்சா" விருதை தொடர்ச்சியாக பன்னிரண்டு ஆண்டுகள் வென்றுள்ளதாம். 2017 ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த பத்து பீஸ்ஸா உணவகங்களில் ஒன்றாக மாடர்ன் அபிஸ்ஸா தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனாலதான் இந்த உணவகத்துல எப்பயும் பீட்ஸா சாப்பிடுவதாக அந்த ஜூனியர் பையன் சொன்னான். சரிடா தம்பி அந்த அற்புத பீட்ஸாவை வாங்கி எனக்கு பார்சல் அனுப்பு என அவன்கிட்ட சொல்லியிருக்கேன்.