#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா? இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்!
  • 11:22AM Sep 20,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:22AM Sep 20,2019 India

இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் 99 சதவிகிதம் வெற்றியில் முடிந்தாலும், அந்த 1 சதவிகிதம் என்ன ஆச்சு என்று கேட்கும் மனநிலை தான் பாதி பேரிடம் உள்ளது. இன்னைக்கு விவசாயிகள் படும் கஷ்டத்திற்கு மத்தியில் நமக்கு நிலவில் ஆராய்ச்சி தேவை தானா.? மக்கள் வரிப்பணம் வீணாகாதா.? என்று இன்னொரு பக்கம் கூச்சல். இதெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, கொஞ்சம் பொதுவாக யோசிக்கலாம். இன்னைக்கு மக்களுக்கு இருக்கும் கஷ்டத்தில், சினிமா தேவை தானா.? என்று சினிமாவை ஒதுக்கி வைத்துவிட முடியாது.

மனிதர்களுக்குள் பொதுவாக ஒரு கஷ்டம் இருந்தால், இன்னொரு பக்கம் சந்தோசம் கொடுக்க இன்னொன்று கட்டாயம் இருக்க வேண்டும். நான் கஷ்ட படுகிறேன், நீயும் கஷ்ட படு என்று யாரையும் வற்புறுத்த முடியாது. எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை. மற்ற தொழில் வளத்தை போல வானியல் ஆராய்ச்சியும் ஒரு நாட்டின் அங்கம். இந்தியாவை ஏளனமாக பார்த்த நாடுகள் கூட, இன்றைக்கு இந்தியாவின் திறமையை கண்டு, நம்மை நோக்கி ஓடி வருகின்றன. வெறும் வானியல் ஆராய்ச்சி என்று பார்க்காமல், ஒரு நாட்டின் நிலையை பிரதிபலிக்கிறது இது போன்ற முயற்சிகள். இதனால் இந்தியாவில் முதலீடுகள் பெருகும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

இஸ்ரோ 1981 ஆண்டு செயற்கைக்கோளை ஏவுதளத்திற்கு கொண்டு செல்லக்கூட முறையான வாகன வசதி இல்லை. மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட படத்தை பார்த்திருப்போம். இதே இஸ்ரோ 2017லிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் மட்டும் வணிக ரீதியாக மட்டும் பல நாடுகளை சேர்ந்த 239 செயற்கை‌க்கோள்கள் இஸ்ரோ மூலம் விண்ணில் ஏவப்பட்டு, அதன் மூலம் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இஸ்ரோ மூலம் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்குதான் இந்திய அரசு இஸ்ரோவின் ஆராய்ச்சிக்கு கொடுக்கிறது. சமீப ஆண்டுகளில் இஸ்ரோ மூலம் இந்திய அரசிற்கு வருவாய்தான் கிடைக்கிறது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கலாமா என கேட்கும் அதிபுத்திசாலிகளுக்கு தன் வருவாய் மூலம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது  இஸ்ரோ. | #Defence: பதறும் உலக நாடுகள் : இந்தியாவை சுற்றி லேசர் சுவரை போல பாதுகாப்பு - பராக்கிர பலம் பெறும் இந்திய இராணுவம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top