UC Browser ஆபத்தானதா???
  • 07:03AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:03AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

UC ப்ரவுசர், சீனாவிலுள்ள அலிபாபா.காம் என்ற இணையதளத்திற்குச் சொந்தமான இது தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.  அது, அந்த ப்ரவுசரைப் பயன்படுத்துவோரின் தகவல்களை உரியவரின் ஒப்புதல் இல்லாமல் சீன சர்வர்களுக்கு அனுப்பி வைக்கிறது என்பது.  இதன் காரணமாக விரைவில் இந்தியாவில் இவை தடை செய்யப்படலாம் எனவும் நம்பப்படுகிறது. இது குறித்து நிறையப் புகார்கள் வந்திருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. (நன்றி : News18)

அப்படி என்னதான் தகவல்களை இதனால் திரட்டிவிட முடியும் என நினைப்பவர்களுக்கு, UC ப்ரவுசரை ஒருமுறை பாருங்கள்.  ஏற்கெனவே உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகள் மற்றும் தகவல்களை அதனால் பெற முடியும்.  கூடுதல் தகவல்களாக நீங்கள் செல்லும் இடம் போன்றவை, அடிக்கடி செல்லும் பக்கங்கள் என அனைத்தையும் பார்க்க முடியும்.  மேலும், மற்ற ப்ரவுசர்களைக் காட்டிலும் இதில் விளம்பரங்களும், செய்திகளும் அதிகளவில் இருக்கும்.  இவற்றைக் கொண்டு உங்களைப் பற்றிய முழு உளவியல் ஆய்வறிக்கை தயாரித்துவிட அவற்றால் முடியும். 

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் மூளுமா என்ற கேள்வி எழும் வேளையில் ஆரம்பத்தில் தயங்கிய சீனா, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது. காரணம் நாம் பேசிய இந்தியாவால் சீனாவை ஜெயிக்க முடியாது, மோடியின் மீது வெகுஜன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி போன்ற பேச்சுக்களால் கூட இருக்கலாம்.  இந்த ப்ரவுசரின் தாக்கம் மிக அதிகம். இன்று 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  இதனாலேயே அது மிகவும் ஆபத்தானதாக மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

கூகூள் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தரவுகளைச் சேமித்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல், மாற்றுப்பாதை போன்ற பல விஷயங்களைச் சேகரித்து நமக்களிக்கவே.  ஆனால், நமக்கு கொஞ்சமும் பயனில்லாத, நம்மைப் பற்றிய அனைத்துத் தரவுகளும் வேறொரு நாட்டின் சர்வருக்கு செல்லும் பட்சத்தில், நம்மைப் பற்றி அவர்களுக்கு நம்மை விட அதிகம் தெரிந்திருக்கக் கூடும் என்பதையே சுட்டிக் காட்டும்.  இதனால், நம்மில் யாரை வேண்டுமானாலும் அவர்களது போக்கிற்கு, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள முடியும் என்பதையும் சற்று யோசித்தால் நல்லது.

ஒரே ஒரு நல்ல விஷயம், தென்னகம் சீனா எல்லை மீற ஆரம்பித்த நாள் முதலே பெரும்பாலான சீனப் பொருட்களை பயன்படுத்துவதை தன்னாலே நிறுத்திக் கொண்டது.  அதனால் நமக்குப் பெரிதாக ஆபத்தில்லையென்றாலும் இந்தத் தகவலை பிற மாநிலங்களில் உள்ள நண்பர்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு இந்தியனாக நமது கடமை என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகிறது.    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top