#A2milk: பாக்கெட் பாலா? பால் கேன் பாலா? காலங்காத்தால ஈரோடு விவசாயி பட்ட அவஸ்தை!
  • 18:36PM Feb 23,2020 Erode
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 18:36PM Feb 23,2020 Erode

கிராமத்தில் பால் கறந்து தினமும் 40 கிலோமீட்டர் தாண்டி ஈரோடு வந்து பால் விற்கும் விவசாயி தான் உண்மையாக இருந்தும், என்ன மாதிரியான அவஸ்தைகளை எல்லாம் எதிர் கொண்டார் என்பதை பகிர்ந்துள்ளார். இன்றைக்கு ஈரோட்டுல சம்பத்நகர்ல எமது தோட்டத்துப்பாலை வாங்கும் ஒரு அக்கா கேட்டாங்க. தம்பி பாக்கெட் பால் வாங்குனப்ப தயிர் நல்லா கெட்டியா இருக்கும். ஆனா நீ கொடுக்கற பால் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. ஒரு நாளைக்கி பாத்தா ஓரளவு தெடமா இருக்கு,மற்ற நாள்ல ரொம்ப இளக்கமா தான் இருக்குன்னு சொன்னாங்க.

நானும்,அக்கா கறவை மாடு தினமும் ஒரே தரத்துல பால் கறக்காதுங்க. வெயில்,மழை,குளிர் போன்ற சீதோஷ்ண நிலமை,தோட்டத்தில் தீவனங்கள் உட்கொள்ளும் அளவு, இளங்கன்னு மாடு,வத்தக்கறவை போன்ற காரணத்தால கறவையின் தரம் மாறுமுங்கன்னு சொல்லிப்பாத்தனுங்க. திரும்பவும் கேக்கறாங்க, அதெப்படி அப்படீன்னா எல்லா பாலும் மாட்டுப்பால்தானே, பால்காரர் கிட்ட வாங்கினேன், பாக்கெட் பால் வாங்கினேன், பக்கத்துல பால் பண்ணைல வாங்கினேன் எல்லா பாலும்,தயிரும் திடமாதானே இருந்ததுன்னு சொன்னாங்க.

என்னுடைய பாலின் உண்மைத்தன்மையை மட்டுமே எடுத்துச் சொல்ல எனதுமனம் உடன்பட்டுச்சுங்க. அரை மனசோடதான் அக்கா ஏத்துக்கிட்டாங்க. மத்தபடி பாலை தினமும் ஒரே மாதிரி திடமாக கொடுக்கறதுங்கறது, பால் மாட்டின் மடி தாண்டியபிறகு நடக்கும்
சமாச்சாரம்ங்கறதும், அதன் தொழில்நுட்பம் என்ன என்பதும் எனக்கும் தெரியும்ங்க. மற்றவற்றை எதிர்மறையாக சொல்லி நான் உத்தமன் என்று நிரூபிக்க விரும்பவில்லைங்க. தோட்டத்துல பத்து மாடு வெச்சு பக்குவம் பண்ணி, வெடிஞ்சும் வெடியாம,பச்சத்தண்ணி படாம பால கறந்து,மொதல்ல நம்மூட்டு குழந்தைகளுக்கு கொடுத்துட்டு அப்பறமா 40 கிலோமீட்டர் கொண்டுவந்து ஈரோட்டு உறவுகளுக்கு நாலு மாடிகூட ஏறி கதவ தட்டி சிறு கலங்கமில்லாம நல்ல பாலை கொடுக்கறோம்ங்கற மனநிறைவோட ஊருக்கு திரும்பறனுங்க.

கடந்த ஒரு வருடத்திற்கு மேல், எங்களுக்கு சூரிய உதயம் ஈரோட்டுல தானுங்க. ஈரோட்டுல ஆரம்பத்துல ரெண்டே ஊட்டுக்காரர்தான் வாங்குனாங்க. அப்படி வாங்குனவங்க பயன்படுத்தியபிறகு நல்ல மனசு பண்ணி அக்கம்பக்கம் சொல்லி இன்னைக்கி நாப்பது ஊட்டுக்கும்,திண்டல் வேளாளர் கல்வி நிறுவனத்துல ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற குழந்தைகளுக்கும் நம்ம தோட்டத்துப்பால் கொடுக்கறதுல ரொம்ப மகிழ்ச்சீங்க. மழையோ,வெய்யிலோ, நோம்பியோ,நொடியோ.. கஷ்டமோ,நஷ்டமோ... எதுவாயினும் ஒவ்வொரு நாளும் காலங்காத்தால நாப்பது ஊட்டு குழந்தைகளுக்கு நல்ல பால கொடுக்கற சந்தோஷம் இருக்குது பாருங்க. சொல்லிமாளாதுங்க என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். | TRADITIONALRECIPE: மருத்துவக் குணம் நிறைந்த பீர்க்கங்காய்!!! ஒன்றுக்கு இரண்டு RECIPE-கள் உங்களுக்காக!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top