#CYBERATTACK: கூடங்குளம் அணு உலையைக் குறி வைத்து நடந்ததா CYBER ATTACK!!! என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்!?!
  • 17:36PM Oct 29,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:36PM Oct 29,2019 Chennai

நெல்லை மாவட்டம், மதிப்பீட்டில் இரு NUCLEAR POWER PLANT-கள் கட்டப்பட்டன. சுற்றுப்புற மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, கூடங்குளத்தில் RUSSIA-வின் ஒத்துழைப்புடன் 17,270 கோடி ரூபாய் செலவில், தலா 1000 MEGAWATT மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு NUCLEAR POWER PLANT-கள் கட்டப்பட்டன. தற்போது, மீண்டும் கூடங்குளத்தை NUCLEAR PARK ஆக மாற்றும் வகையில் 6 NUCLEAR POWER PLANT-கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில், சுமார் 39,747 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3-வது மற்றும் 4-வது POWER PLANT-களை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் 2016-ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், பாதுகாப்பு மிகுந்த கூடங்குளம் NUCLEAR POWER PLANT-ல் CYBER ATTACK நடந்துள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியிருக்கிறது.

PANKAJ SINGH என்பவர் வெளியிட்ட TWITTER பதிவில், ‘’எனக்கு நேரடியாக எந்தத் தகவலும் வராத நிலையில், மூன்றாம் நபர் ஒருவர் என்னிடம், ’கூடங்குளத்தில் SECURITY BREACH’ நடந்திருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாக நான் NCSC – NATIONAL CYBER SECURITY COORDINATOR-ஐத் தொடர்பு கொண்டு SEPTEMBER 4-ம் தேதி நடந்த ஊடுருவல் குறித்த தகவலைத் தெரியப்படுத்தினேன். அதன் பின்னர், அந்த நபரே NCSC-யைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார்’’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தகவல் வெளியானதும் TWEET செய்த சசிதரூர் M.P., ‘’இது மிகவும் முக்கியத்துவம் மிகுந்தது. நமது NUCLEAR POWER துறை மீது CYBER ATTACK நடத்துவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட எச்சரிக்கை. இது தொடர்பாக அரசு சார்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூடங்குளம் NUCLEAR POWER PLANT-ன் WEBSITE-ஐ முடக்கும் வகையில் நடத்தப்பட்ட முயற்சி தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இது குறித்து நெல்லை மாவட்ட S.P. அருண் சக்தி குமாரிடம் கேட்டதற்கு, அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார். கூடங்குளம் NUCLEAR POWER PLANT மற்றும் INDIAN NUCLEAR PORGRAM-க்கான கண்காணிப்பு மையங்கள் அனைத்தும் தனியாக இணைக்கப்பட்டுள்ளதே தவிர WEBSITE-ன் மூலமாக இணைக்கப்படவில்லை. அதனால் எந்த வகையிலும் CYBER ATTACK-ம் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று NUCLEAR PLANT தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையாக இருந்தால் நல்லதுதான். ஆனால், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில், தொடர்ச்சியாக இப்படி CYBER ATTACK நடத்தப்படுவதாக வரும் தகவல்கள் விளையாட்டல்ல என்பதுதான் உண்மை!!!

Pakistans Ghaznavi  |  San Onfre Nuclear Waste  |  Nuclear Ready Korea  |  Floating Nuclear Reactor  |  Nuclear Waste Issues  | 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top