இணையத்தளங்களின் சேவைகள் உண்மையில் இலவசமா?? உண்மை என்ன??
  • 09:22AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 09:22AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India

குறைந்தபட்சம் நாம் அனைவரும் ஒரு நாளைக்கு இணையம் சேவையை 3  1/2 மணி நேரம் பயன்படுத்துகிறோம்..இன்றைய  காலத்திற்கு நம்மோடு பொழுதுபோக்கின் ஒரு அங்கமாக விளங்கும் இந்த கூகிள்,முகப்புத்தகம்  போன்ற இணையதள சேவைகளுக்கு எந்த விலையும் நாம் கொடுப்பது இல்லை.! சில மணி நேரங்களையே செலவு செய்கிறோம்..நாம் தேடலுக்கும்,பொழுதுபோக்கிற்கும் உதவியாக இருக்கும் இந்த இணையதள சேவைகளுக்கு இதில் என்ன பயன் உள்ளது??! நமது பொழுதுபோக்கில் அவர்களுக்கு என்ன லாபம்??!

உங்களின் வாழ்க்கை சுவடுகள் உங்களை அறியாமல் நீங்களே சிலர்க்கு விற்றுவிடுவதை உங்களால் நம்பமுடிகிறதா?!இது தான் உண்மை!! உங்கள் ஒட்டுமொத்த  வாழ்க்கையும் வெறும் 12 அமெரிக்கா டாலருக்கு விற்று விடுகிறீர்கள்!! எப்படித் தெரியுமா??

நீங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் பொழுது உங்களுக்குப் பிடித்த பொருளோ,நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களோ என்றாவது விளம்பரமாக வருவதைக் கவனித்தீர்களா?? உங்கள் மனதில் இருக்கும் விருப்பங்களையும்,ஆசைகளையும் அந்த வளையதளங்கள் ஒரு வியாபார கண்ணோட்டத்தில் காண்கின்றன!. அதன் மூலம் பயன் அடைகிறார்கள்!.

அன்றில் இருந்து இன்றுவரை அந்த வலைத்தளங்கள் சம்பாதிப்பது இந்த விளம்பரங்கள் மூலமாகத்தான்.. விளம்பரதாரர்கள் உங்கள் தனிப்பட்ட இருப்புவிருப்பங்களை இந்த வலைதளம் மூலமாக விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் .அதுமட்டும் அல்லது நீங்கள் இணையதளத்தில் செய்யும்,பார்க்கும் எல்லாவற்றையும் இந்த வலைத்தளங்கள் கண்காணிக்கிறார்கள்.முன்பின்  தெரியாத நபரிடம் நமது புகைப்படங்களை அனுப்பவே யோசிக்கும் நாம் நம்மை  அறியாமல் நம் அந்தரங்க வாழ்க்கைகளை இலவசத்திற்காக விற்கிறோம்!.

 

 ஆனால் இனிவரும் காலங்களில்  இதைக் கண்டு அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை ..காரணம் இணையதளம்  நமது இரண்டாவது மூளைபோல் செயல்படுகிறது!..நாம் தலையை காப்பாற்றத் தலைக்கவசம் அணிகிறோம் அதைப்போல்  இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top