Misc

#Napping: பிரம்மச்சாரிகள் பகற்பொழுதில் தூங்க கூடாது என்கிறார்களே அது உண்மையா? தூங்கிவிட்டால் என்ன நடக்கும்? தெரிஞ்சுக்கணுமா?

Sep 16 2020 11:09:48 AM

'பிரம்மச்சாரிகள் பகற்பொழுதில் தூங்ககூடாது, பகற் கனவு பலிக்காது' இது போன்ற பல கட்டுக்கதைகளை  கேள்விப்படுகிறோம். ஏன் என ஆராய்ந்த போது, பதில் கிடைத்தது. பிரம்மச்சாரிகள் பகலில் தூங்க கூடாது ஏனெனில் வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டிய அந்த வயதில் தூங்கி கொண்டிருப்பது சரியா? அதே போல் பகல் பொழுதில் தூங்கி கொண்டிருந்தால் வேலை எப்படி நடக்கும்? என்பதால் தான் பகல் கனவு பலிக்காது என யாரோ கூறியுள்ளது இன்றுவரை உலாவி கொண்டிருக்கிறது.

napping sleeping Inemuri jappan

சொல்லப்போனால் பகலில் தூங்கினால் மட்டுமே உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு. காட்டில் வேட்டையாடும் விலங்குகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க முக்கிய காரணம், மதிய நேர குட்டி தூக்கம் தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போலவே நாசா பைலட்டுகளிடம் இந்த சோதனை செய்த போது, பகல் தூக்கத்தால் அவர்களிடம் அதிக விழிப்புணர்வு உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன் நாசா வரை செல்ல வேண்டும்? வீடுகளில் உள்ள பெண்கள் கண்டிப்பாக மதிய வேளையில் குட்டி தூக்கம் போடுவார்கள். அதனால் தான் மாலையில் அவர்களால் அவ்வளவு சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்ய முடிகிறது.

napping sleeping Inemuri jappan

உளவியல் ரீதியாக மதியம் அல்லது பகற்பொழுதில் 20 நிமிட குட்டிதூக்கம் போடுவது இரவு நேரத்தில் ஒருமணிநேரம் தூங்குவதற்கு சமம். மெக்சிகோ நாட்டில் இளம்வயதினர் மதியத்தில் தூங்கினால் எதிர்காலம் பற்றிய பயம், மனக்கவலை இன்றி வளர முடியும் என்கிறது அந்நாட்டு அரசு. 

napping sleeping Inemuri jappan

ஜப்பான் நாட்டில், அவர்களது பணியாளர்களுக்கு அதீத வேலைப்பளு காரணமாக பகற்பொழுதில் குட்டி தூக்கம் போட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த குட்டி தூக்கம் புத்துணர்ச்சி தரும் என நம்புகிறாரகள். அந்நாட்டில் இந்த வழக்கத்திற்கு இனிமுறி(Inemuri) என்று பெயர். அதாவது அசந்து தூங்குவது என பொருள்படும்.

napping sleeping Inemuri jappan

அலுவலகம் மட்டுமின்றி காபிஷாப், பார்க், ரயில்வே ஸ்டேஷன் என பொது இடங்களில் குட்டி தூக்கம் போட அனுமதிக்கப்படுகிறார்கள். அந்நாட்டு மக்கள் இரவு ஆறு மணிநேரம் மட்டுமே தூங்குவதால் அந்நாட்டு அரசு பகலில் தூங்க அனுமதிக்கிறதாம். நம் நாட்டில் மதியத்தில் தூங்கினால் சோம்பேறி என்பார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் தூங்கினால் கடின உழைப்பாளி என்பார்கள்.

napping sleeping Inemuri jappan

ஆனால் பகலில் தூங்கினால் உடம்பு வந்திரும் என்ற கருத்து உள்ளதே? இது முற்றிலும் தவறு. வயிறு முட்ட உண்டுவிட்டு நீண்ட நேரம் தூங்கினால் மட்டுமே, உடல் எடை கூடும் என்கிறது ஆய்வு. ஆக, பகலில் குட்டி தூக்கம் பயன்தரும். அதுவே இரண்டு அல்லது மூன்று மணிநேரம் நீடித்தால் நீரிழவு நோய்களுக்கும் வழிவகுக்குமாம். அளவாக தூங்கி, நலமாக வாழ்வோம்.